தேடுதல்

Boracay தீவு Boracay தீவு 

Boracay தீவின் அழகு, மக்களின் கலாச்சாரம் பாதுகாக்கப்பட...

பிலிப்பீன்சின் மேற்கு Visayas பகுதியில், Aklan மாநிலத்தின் ஒரு பகுதியாக விளங்கும் Boracay தீவு, வெள்ளை மணலுக்கும், மிகத்தெளிவான தண்ணீருக்கும், ஏராளமான கடல்வாழ் உயிரினவகைகளுக்கும் புகழ்பெற்ற தீவாகும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் பலராலும் அறியப்பட்ட மற்றும், சுற்றுலாக்கள் அதிகம் இடம்பெறும் Boracay தீவின் சமுதாய, கலாச்சார மற்றும், அறநெறி சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்படுமாறு, அந்நாட்டின் மேற்கு Visayas பகுதியின் எட்டு கத்தோலிக்க ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

அத்தீவில் பரவலாக இடம்பெறும் சூதாட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர்கள், Boracay தீவு, அப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கும், உலகமனைத்திற்கும் கடவுள் வழங்கியுள்ள கொடை என்றும், குடும்பங்கள் பேரின்பம் காணும் இடம் என்றும் கூறியுள்ளனர்.

கல்வியில் முன்னேற்றம் காணவும், வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கவும் உதவுகின்ற Boracay தீவு, அரசுக்கும் மக்களுக்கும் வருவாய் ஈட்டித்தரும் இடமாகவும் உள்ளது என்றும் கூறியுள்ள ஆயர்கள், கடவுளால் இயற்கையான வியப்புக்கள் வழங்கப்பட்டுள்ள இத்தீவை பாதுகாப்பதற்கும், அதைப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக அமைக்கவும் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டியுள்ளனர்.

பிலிப்பீன்சின் மேற்கு Visayas பகுதியில், Aklan மாநிலத்தின் ஒரு பகுதியாக விளங்கும் Boracay தீவு, வெள்ளை மணலுக்கும், மிகத்தெளிவான தண்ணீருக்கும், ஏராளமான கடல்வாழ் உயிரினவகைகளுக்கும் புகழ்பெற்றதாகும்.

இத்தீவில் சூதாட்டங்களும், சூதாட்ட மையங்களும் கட்டப்பட்டு வருவது கவலை தருகின்றது என்றும், இது சுற்றுலாப் பயணிகளை, அத்தீவின் அழகை இரசிக்கவிடாமல் திசைதிருப்ப காரணியாக அமையும் என்றும், மக்களின் வாழ்க்கைமுறையையும், அப்பகுதியின் கலாச்சார மதிப்பீடுகளையும் அழித்துவிடும் என்றும், ஆயர்கள், எச்சரிக்கை விடுத்துள்ளனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2021, 15:09