Haiti நாட்டைப் அழிவிலிருந்து காப்பாற்ற ஆயர்கள் வேண்டுகோள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
Haiti நாட்டைப் பெரும் அழிவிலிருந்து காப்பாற்ற அந்நாட்டின் அரசியல் தலைவர்களும், ஆயுதம் தாங்கிய குழுக்களும் ஒன்றிணைந்து முன்வரவேண்டும் என உருக்கமான விண்ணப்பத்தை முன்வைத்துள்ளனர் Haiti நாட்டு ஆயர்கள்.
நிகழ்காலத்திற்கும் வருங்காலத்திற்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு சூழலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் Haiti நாட்டில், மக்கள் நலனை மனதில் கொண்டு உறுதியான பயன்தரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காலமிது எனக் கூறியுள்ளனர் ஆயர்கள்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6ம் தேதிக்கும் 7ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் Haiti அரசுத் தலைவர் Jovenel Moise படுகொலைச் செய்யப்பட்டது, கடந்த சில மாதங்களாக நாட்டில் போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களும் ஆள்கடத்தல்களும் அதிகரித்து வருவது, கடந்த ஆகஸ்ட் மாத நிலநடுக்கம் ஆகியவைகளால் நாட்டில் ஏழ்மையும் பதட்ட நிலைகளும் அதிகரித்து வருகின்றன எனவும் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.
வரலாற்றில் மிகப்பெரும் சோகத்தை அனுபவித்து வரும் Haiti மக்களின் சார்பாக அரசியல் தலைவர்களுக்கும் ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கும் அமைதி விண்ணப்பத்தை விடுத்துள்ள Haiti ஆயர்கள், பிரிவினைகள், ஒற்றுமையின்மை, முரண்பாடுகள், சகோதர மோதல்கள், சுயநலம் போன்றவைகளுக்கான நேரம் இதுவல்ல எனவும் கூறியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்