தேடுதல்

பொம்மைத் துப்பாக்கிகளை வைத்திருக்கும் பள்ளி மாணவர்கள் பொம்மைத் துப்பாக்கிகளை வைத்திருக்கும் பள்ளி மாணவர்கள் 

துப்பாக்கி வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட...

அமெரிக்க ஐக்கிய நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் முற்றிலுமாக தடைசெய்யப்படவேண்டும். ஆயுதங்கள், மற்றும், வெடிமருந்துகளை, குடிமக்கள் பெறுவது வரையறுக்கப்படவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டில், அண்மை வாரங்களில் இடம்பெற்றுள்ள பல துப்பாக்கிச்சூடு வன்முறைகளில் குற்றமற்ற உயிர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளவேளை, இந்தக் கொடூரத்தை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று, அந்நாட்டின் நான்கு முக்கிய கத்தோலிக்கத் தலைவர்கள், காங்கிரஸ் அவையை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடுந்துயரங்களை ஏற்படுத்தியுள்ள, மனிதப் புரிதலுக்கு அப்பாற்பட்ட இந்தப் படுகொலைகள் நிறுத்தப்படுவதற்கு சட்ட அமைப்பாளர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று, அந்நாட்டின் நான்கு ஆயர்கள், காங்கிரஸ் அவைக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வன்முறைகள் குறித்து தங்களின் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதோடு, இவை குறித்து காங்கிரஸ் அவையின் அனைத்து உறுப்பினர்களும் பரிவன்போடு சிந்தித்துப் பார்க்குமாறு அழைப்புவிடுத்துள்ள ஆயர்கள், Texasன் Ulvade, New Yorkன் Buffalo ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ள பல துப்பாக்கிச்சூடுகள், நாட்டின் தரம் குறித்து பரிசீலனை செய்யத் தூண்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

மக்களின் மனநலம், குடும்பங்களின் நிலை, வாழ்வு மதிக்கப்படும் முறை,  பொழுதுபோக்குகளின் தாக்கம், சூதாட்டத் தொழிற்சாலைகள், துப்பாக்கிகள் எளிதில் கிடைக்கும் வழிகள் போன்ற விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்யப்படவேண்டியது மிகவும் முக்கியம் என்பதையும் ஆயர்களின் கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின், நீதி மற்றும் மனித முன்னேற்ற பணிக்குழுவின் தலைவர் Oklahoma பேராயர் Paul S Coakley, பொதுநிலையினர், திருமணம், குடும்ப வாழ்வு மற்றும், இளையோர் பணிக்குழுவின் தலைவர் சான் பிரான்சிஸ்கோ பேராயர் Salvatore J Cordileone, மனித வாழ்வுக்கு ஆதரவளிக்கும் பணிக்குழுவின் தலைவர் பால்டிமோர் பேராயர் William E Lori, கத்தோலிக்க கல்வி பணிக்குழுவின் தலைவர் Spokane ஆயர் Thomas A Daly ஆகிய நால்வரும் இணைந்து, இக்கடிதத்தை, காங்கிரஸ் அவைக்கு அனுப்பியுள்ளனர். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2022, 16:26