தேடுதல்

மைலாப்பூர் ஆலயம், தமிழ்நாடு மைலாப்பூர் ஆலயம், தமிழ்நாடு 

நேர்காணல்: தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டு பணிக்குழு பகுதி2

கத்தோலிக்கத் திருவழிபாட்டில் ஆர்வமிழந்து பிற சபைகளுக்குச் செல்லும் கத்தோலிக்கர், தாய் சபைக்குத் திரும்புவதற்கு தலத்திருஅவையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

தமிழக இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் பேரவையில்,  விவிலியம், திருவழிபாடு, கல்வி, நீதி, அமைதி, மற்றும் வளர்ச்சி (TASOSS), நற்செய்தி அறிவிப்பு மற்றும், கத்தோலிக்க அருங்கொடை இயக்கம், மறைக்கல்வி, தொழில், குடும்பம், நலவாழ்வு, இறையழைத்தல், பொதுநிலையினர், இளையோர், பிற்படுத்தப்பட்டோர், உரையாடல், மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு, பெண்கள், அன்பியம் (BEC), சமூகத்தொடர்பு என 18 பணிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் திருவழிபாட்டு பணிக்குழுவின் தலைவராக திருச்சி ஆயர் மேதகு எஸ். ஆரோக்யராஜ் அவர்களும், அதன் செயலராக, அருள்பணி முனைவர் எம். அலெக்சான்டர் அவர்களும் பணியாற்றி வருகின்றனர். அருள்பணி எம். அலெக்சாண்டர் அவர்கள், தற்போது, திண்டிவனத்தில் அமைந்துள்ள தமிழக ஆயர் பேரவையின் விவிலிய, மறைக்கல்வி, திருவழிபாட்டு நடுநிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர், இந்நிலையம் பற்றியும், திருவழிபாட்டுப் பணிக்குழு பற்றியும், திருவழிபாட்டின் முக்கியத்துவம் பற்றியும் பகிர்ந்துகொண்டதை கடந்தவார நேர்காணல் நிகழ்ச்சியில் வழங்கினோம். அதைத் தொடர்ந்து இன்று...

தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டு பணிக்குழு பகுதி2:அருள்பணி முனைவர் அலெக்சான்டர்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2022, 13:40