தேடுதல்

மறைசாட்சி Pietro Paolo Oros மறைசாட்சி Pietro Paolo Oros  

இறைஊழியர் Maria Celina Kannanaikalன் புண்ணிய வாழ்வு ஏற்பு

ஹங்கேரி நாட்டில், 1953ஆம் ஆண்டில் முன்னாள் சோவியத் யூனியன் அரசால் கொல்லப்பட்ட அருள்பணி Pietro Paolo Oros அவர்கள், அருளாளராக உயர்த்தப்படுவதற்கு திருத்தந்தை இசைவு தெரிவித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியாவின் இறைஊழியர் Maria Celina Kannanaikal அவர்கள் உட்பட ஐந்து இறைஊழியர்கள், உக்ரைன் மறைசாட்சி ஒருவர் ஆகியோரின் புண்ணிய வாழ்வு குறித்த சிறப்பு விவரங்களுக்கு இசைவு தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 05 இவ்வெள்ளி காலையில், புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவரான கர்தினால் மார்செல்லோ செமெராரோ (Marcello Semeraro) அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்து, இவ்விவரங்களைச் சமர்ப்பித்தார்.

உக்ரைன் நாட்டின் Mukačevo மறைமாவட்டத்தின் அருள்பணி Pietro Paolo Oros அவர்கள், ஹங்கேரி நாட்டின் Siltse நகரில், முன்னாள் சோவியத் யூனியன் அரசால் 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி கிறிஸ்தவ நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்டார். மறைசாட்சிய வாழ்வை எதிர்கொண்ட இவர், 1917ம் ஆண்டில் ஹங்கேரியின் Biri நகரில் பிறந்தவர். இவர் அருளாளராக உயர்த்தப்படுவதற்கு திருத்தந்தை இசைவு தெரிவித்துள்ளார்.

இறைஊழியர்கள்

இந்தியாவின் கேரள மாநிலத்தின் Kundannurல் 1931ஆம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி பிறந்த, அமல மரியின் ஊர்சுலைன் துறவு சபை அருள்சகோதரி Maria Celina Kannanaikal அவர்கள், 1957ஆம் ஆண்டு ஜூலை 26ம் தேதி Kannurல் இறைபதம் சேர்ந்தார்.

கொலம்பியா நாட்டின் மறைமாவட்ட அருள்பணியாளர் Jesús Antonio Gómez Gómez (1895-1971);

இத்தாலியின் கப்புச்சின் சபையைச் சார்ந்தவரும், பிரான்சிஸ்கன் புன்னகைப் பணி அமைப்பை உருவாக்கியவரும், குழந்தை இயேசுவின் சிறிய சகோதரிகள் சபையை ஆரம்பித்தவருமான Giovanni Giuseppe Bonzi (1898-1969);

இஸ்பெயின் நாட்டின் இயேசு கிறிஸ்து தலைமைக்குருவின் திருமடச்சார்பற்ற அமைப்பை உருவாக்கிய அருள்பணி Giovanni Sánchez Hernández (1902-1975);

பிரேசில் நாட்டின் உலக மீட்பர் சபையின் அருள்பணி Vittorio Coelho de Almeida (1899-1987) ஆகிய ஐந்து இறைஊழியர்களின் வீரத்துவப் புண்ணிய வாழ்வு குறித்த விவரங்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2022, 14:18