தேடுதல்

குவாத்தமாலாவில் சுதந்திர தினக் கொண்டாட்டம் குவாத்தமாலாவில் சுதந்திர தினக் கொண்டாட்டம் 

கடவுளின் பெயர், தன்னலத்தோடு கலக்கையில் சுதந்திரத்திற்கு ஆபத்து

300 ஆண்டுகால இஸ்பானிய காலனி ஆதிக்கத்திற்குப்பின், 1821ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியன்று குவாத்தமாலா நாடு சுதந்திரம் பெற்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

கடவுளின் பெயர், அரசியல் கட்சிகளின் தன்னல ஆதாயங்களோடு கலக்கும்போது சுதந்திரம் என்னும் கொடை ஆபத்தை எதிர்கொள்கின்றது என்று குவாத்தமாலா ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் செப்டம்பர் 15, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட சுதந்திர நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள அந்நாட்டின் Escuintla ஆயர் Victor Hugo Palma Paul அவர்கள், திருவிவிலியம், மற்றும், நம் தந்தை நாட்டின் மாதமாகிய இந்த செப்டம்பரில், கடவுள் நமக்கருளியுள்ள கொடைகளுக்கு நன்றி கூறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

குடிமக்களுக்குப் பணிபுரிய விரும்பாமல், தனக்கே பணிபுரியும் எண்ணத்தில் சுயஇலாப நோக்கத்தோடு அதிகாரத்தைக் கைப்பற்றுவோரிடம் நிலவும் அரசியல் போட்டியில் சுதந்திரம் என்னும் கொடை ஆபத்தில் உள்ளது என்றும் ஆயர் Palma Paul அவர்கள் கூறியுள்ளார். 

இதனால் ஊழலும், குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதுமே நாட்டில் நிலவுகின்றன எனவும் உரைத்துள்ள குவாத்தமாலா நாட்டு ஆயர், அந்நாட்டின் தெற்கு கடற்கரையில் இடம்பெறும் வன்முறைக்கு குற்றங்களும், போதைப்பொருள் வர்த்தகமுமே காரணம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் மறைமாவட்டத்தின் அனைத்து பங்குத்தளங்களில் நிறைவேற்றப்படும் திருப்பலிகளில் நாட்டின் உண்மையான விடுதலைக்காகச் செபிப்போம் எனவும், ஆயர் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2022, 15:45