தேடுதல்

CELAM பிரதிநிதிகள் CELAM பிரதிநிதிகள் 

CELAM: திருஅவை, சமுதாயத்தின் விளிம்புநிலைகளை நோக்கிச் செல்ல..

இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதிகள் முன்வைக்கும் மேய்ப்புப்பணி சார்ந்த சவால்களைத் தெளிந்துதேர்வு செய்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது CELAM பேரவை

மேரி தெரேசா: வத்திக்கான்

“ஒருங்கிணைந்து பயணம் மேற்கொள்ளும் திருஅவை சமுதாயத்தின் விளிம்புநிலைகளை நோக்கி” என்ற தலைப்பில், மேய்ப்புப்பணிக்குரிய பரிந்துரைகள்கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, CELAM எனப்படும் இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் ஆயர் பேரவை

நாம் எல்லாரும் மறைப்பணிச் சீடர்களாக, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லவேண்டியவர்கள் என்பதன் முக்கியத்துவத்தை இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும், அவ்வாயர் பேரவை கூறியுள்ளது.

இணையதளம் வழியாக நடத்திய பல்வேறு கூட்டங்களில் பங்குபெற்ற பொதுநிலையினர், துறவியர், அருள்பணியாளர்கள், ஆயர்கள் என அனைத்து இறைமக்களின் அழுகுரல்களைக் கேட்டதன் பயனாக இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று அப்பேரவை கூறியுள்ளது.

CELAM ஆயர் பேரவை நடத்திய பொதுப் பேரவையின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில், இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதிகளைச் சேர்ந்த இறைமக்கள், திருமுழுக்கு வழியாக தாங்கள் பெற்றுள்ள பொதுக்குருத்துவ நிலை குறித்து தெளிவாக அறிந்திருக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதிகள் முன்வைக்கும் மேய்ப்புப்பணி சார்ந்த சவால்களைத் தெளிந்துதேர்வு செய்ததன் பயனாக வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கை, ஓர் இறைவாக்குப் பண்பை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது என, அப்பகுதி ஆயர்கள் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2022, 15:11