தேடுதல்

eSwatini அரசிலுள்ள Manzini-இன் ஆயர் José Luis Ponce de León eSwatini அரசிலுள்ள Manzini-இன் ஆயர் José Luis Ponce de León 

ஊடகங்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன: ஆயர் León.

Eswatini அரசு உலகின் பிற பகுதிகளால் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருப்பது கவலையளிக்கின்றது: ஆயர் José Luis Ponce de León

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வன்முறையும் ஊடகங்களும் ஒன்றாகக் கரம்கோர்த்துச் செல்வது போல் தோன்றுகிறது என்றும், கோபம், பயம் மற்றும் வன்முறையைத் தூண்டுவதற்கு தகவல் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறியுள்ளார் eSwatini (formerly Swaziland) அரசிலுள்ள Manzini-இன் ஆயர் José Luis Ponce de León

ஊடங்களின் தவறான செயல்முறைகள் மற்றும் வன்முறைகளைத் தூண்டும் அதன் போக்குகள் குறித்து Fides செய்தி நிறுவனத்திற்கு எழுதியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள ஆயர் León அவர்கள், பயம் என்பது நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றும், இந்நாடு உலகின் பிற பகுதிகளால் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜூன் 2021-இல் இந்நாட்டில் தொடங்கிய நெருக்கடிக்கு முதன்மையான காரணம் அரசு, எதிர்க்கட்சி மற்றும் நாட்டு மக்களுக்கு இடையே உரையாடல் இல்லாமல் போனதுதான் என்று சுட்டிக்காட்டியுள்ள ஆயர் León அவர்கள், தற்போதைய நிலையில், ஒரு தேசிய உரையாடல் தேவை என்ற ஒரு பொதுவான கருத்து எல்லோரிடத்திலும் நிலவுகிறது என்றும் கூறியுள்ளார்.

ஜூன் 2021-ஆண்டு முதல், உரையாடல் தேவை என்பதை வலியுறுத்திப் பேசிய அரசு, அரசியல் அமைப்புகள், தலத் திருஅவைகள், மற்றும் அரசுச் சாரா அமைப்புகள் அனைத்தும் இதனையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தவும் செய்தன என்றும், ஆனால், இதுவரை இந்த வலியுறுத்தலுக்கு யாருமே செவிசாய்த்ததாகத் தெரியவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார் ஆயர்  León.

இநேரத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் யாவும் சரியானதாகவும் நம்பகத்தன்மை உடையதாகவும் இல்லை என்றும், நாம் என்ன பேசுகிறோம், எப்படி பேசுகிறோம், எதைக்குறித்துப் பேசுகிறோம் என்பதைக் குறித்து நம்மை நாமே கேள்விக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் ஆயர்  León.

இந்த நாள்களில் நமது எல்லைக்கு அப்பாலிருந்து eSwatini பற்றிய தகவல் இல்லாததைக் காண்பது ஆச்சரியமாக உள்ளது என்றும், கடந்த காலங்களில் நமது அமைதியின்மை பற்றி அதிகம் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் யாவும் இப்போது அமைதி காக்கின்றன என்றும், இதனால் இங்கே என்ன நடக்கிறது என்பதில் அவைகள் ஆர்வம் காட்ட விரும்பவில்லை என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் ஆயர் León. (Fiedes)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2022, 14:18