அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அமெரிக்காவிலுள்ள வெர்ஜீனியாவின் பல்பொருள் அங்காடியில், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேரை கொல்லப்பட்டனர் என்றும், இது அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் கொல்லப்படுவார்களின் எண்ணிக்கையை அதிர்க்கரித்துள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 22, இச்செவ்வாயன்று, உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது என்றும், இது அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள மற்றொரு பயங்கரம் என்றும் செய்திகள் கூறுகின்றன.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தின் Chesapeake-விலுள்ள வால்மார்ட் நிறுவனத்திற்குள் இந்த சோகம் நடந்துள்ளது என்றும், சந்தேகத்துக்குரிய நபர் கடையின் மேலாளர் எனவும், அவர் தனியொரு ஆளாக இதனைச் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் குடும்பமாகவும் நண்பர்களாகவும் இறைவனுக்கு நன்றி கூறுவதற்கு ஒன்றிணைந்திருந்த நேரத்தில் நிகழ்ந்த இந்த மதியற்ற வன்முறைச் செயலால் இழந்த அதிகமான ஆன்மாக்களின் சோகமான மற்றும் வேதனையான செய்தியால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் விழித்துக்கொண்டது என்று, நவம்பர் 23, இப்புதனன்று இதுகுறித்து கருத்துத் தெரிவித்த Richmond-வின் ஆயர் Barry Knestout கவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இதற்கு முன்னர் நிகழ்ந்த தூப்பாக்கிச் சூட்டின்போது, நாட்டின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள, “ஆயுதங்களை தாங்கும் உரிமை மனித உயிரை விட முக்கியமானதாக இருக்காது” என்றும், மேலும் அரசியல் தலைவர்களுக்கு உயிர்களைப் பாதுகாக்கும் உரிமையும் கடமையும் உள்ளது என்றும் பல முறை வலியுறுத்தியுள்ளார் சிக்காகோ பேராயர் கர்தினால் Blase Cupich.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஏற்கனவே அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடுகளைக் கண்மூடித்தனமான ஆயுதக் கடத்தல் என்று வர்ணித்ததுடன் இதனை முடிவுக்கு கொண்டு வருமாறும் அழைப்புவிடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்