தேடுதல்

நம்பிக்கை தரும் சிலுவை நம்பிக்கை தரும் சிலுவை 

2022 ஆம் ஆண்டில் 18 மறைப்பணியாளர்கள் படுகொலை

2001 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை, உலகில் மொத்தம் 526 மறைப்பணியாளார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .

மெரினா ராஜ் – வத்திக்கான்

2022 ஆம் ஆண்டில் மட்டும் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்தவ மறைப்பணியாளர்களின் எண்ணிக்கை 18 எனவும், இதில் ஆப்ரிக்க மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மறைப்பணியாளர்களே அதிகம் எனவும் பீதேஸ் செய்தி தெரிவித்துள்ளது.

டிசம்பர் 30 இவ்வாண்டின் கடைசி வெள்ளிக்கிழமையன்று, 2022 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட மறைப்பணியாளர்களின் தகவல்களை வெளியிட்ட பீதேஸ் செய்தி நிறுவனம், மறைந்த 18 மறைப்பணியாளர்கள், ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட 18 மறைப்பணியாளர்களில், 12 பேர் அருள்பணியாளர்கள் 1 அருள்சகோதரர்,  3 அருள்சகோதரிகள், 1 அருள்பணித்துவ மாணவர், 1 பொது நிலையினர் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான மறைப்பணியாளர்கள் ஆப்ரிக்காவில் படுகொலை செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆப்ரிக்காவில் இறந்த 9 பேரில் 7 பேர் அருள்பணியாளர்கள், 2 அருள்சகோதரிகள் என்றும்,  இலத்தின் அமெரிக்காவில் இறந்த 8 பேரில், 4பேர் அருள்பணியாளர்கள், 1 அருள் சகோதரி, 1 அருள்பணித்துவ மாணவர், என்றும், ஆசியாவில் 1 அருள்பணியாளர் என 18 மறைப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில், இந்த சோகமான தரவரிசையில் ஆப்பிரிக்காவும் அமெரிக்காவும் மாறி மாறி முதல் இடத்தில் உள்ளதாகவும், அமெரிக்கா 2011 - 2021 வரை 8 ஆண்டுகள் எனவும் ஆப்ரிக்கா 3 ஆண்டுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  (2018, 2019, 2021).

2001 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை, உலகில் 526 மறைப்பணியாளார்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ( Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2022, 13:33