தேடுதல்

ஆபிரகாமுடன் சாரா மற்றும் ஆகார் ஆபிரகாமுடன் சாரா மற்றும் ஆகார் 

தடம் தந்த தகைமை - ஆகாரும் இஸ்மயேலும்

இஸ்மயேலின் பிறப்பு குறித்து முன்னறிவித்த இறைதூதர், “எல்லோரையும் அவன் எதிர்ப்பான், எல்லோரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்” என்றார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆபிரகாமுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. வயது முதிர்ந்துவிட்டதால் தனக்கு இனிமேல் குழந்தை பிறக்காது என்பதை உணர்ந்த ஆபிரகாமின் மனைவி சாரா, தன் பணிப்பெண்ணுடன் படுத்து ஒரு குழந்தை பெற்றுத்தருமாறு ஆபிரகாமை கட்டாயப்படுத்தினாள். அவரும் இசைய, எகிப்திய பணிப்பெண் ஆகார் கருவுற்றார். கருவுற்ற நாள் முதலே, தன் தலைவி சாராவை ஏளனமாகப் பார்க்கத் துவங்கினார் ஆகார். இதனால் கோபமடைந்த சாரா, அப்பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தவே, அப்பெண் வீட்டிலிருந்து தப்பியோடி பாலைநிலத்தில் அலைந்தார். அங்கு ஆகாரைச் சந்தித்த ஆண்டவரின் தூதர், “நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட. உன் வழி மரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன். கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு ‘இஸ்மயேல்’ எனப் பெயரிடுவாய். ஏனெனில், உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார். ஆனால், அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லோரையும் அவன் எதிர்ப்பான், எல்லோரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்” என்றார்.

ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தார். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் ‘இஸ்மயேல்’ என்று பெயரிட்டார். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2023, 12:05