தேடுதல்

எரியும் முட்புதரின் முன் மோயீசன் எரியும் முட்புதரின் முன் மோயீசன் 

தடம் தந்த தகைமை – எரியும் முட்புதர்

ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால், அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்கு திசையில்  ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். அப்போது தூரத்தில்  ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால், அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. “ஏன் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்” என்று மோசே தனக்குள் கூறிக்கொண்டார். எனவே அதனைப்  பார்ப்பதற்காக முட்புதரை அணுகி சென்றார். அவர் வருவதை ஆண்டவர் கண்டு, ‘மோசே, மோசே’ என்று சொல்லி முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைத்தார். அவர் “இதோ நான்” என்றார். அதற்கு ஆண்டவர், “இங்கே அருகில் வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில், நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்” என்றார். மேலும் அவர், “உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே” என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2023, 13:09