தேடுதல்

அன்பின் அடையாளமான சிகப்பு ரோஜா மலர் அன்பின் அடையாளமான சிகப்பு ரோஜா மலர்  

அன்பே உலகைக் குணப்படுத்தட்டும் – ஆயர் Emmanuel Adetoyese Badejo

நம் நாடும் உலகமும் எல்லா காயங்களிலிருந்தும் குணமடையவும், அறிவாற்றலுடன் செயல்படவும் ஒவ்வொரு இதயத்திலும் உண்மையான அன்பு தேவை

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாம் யாராக இருந்தாலும் அன்பு நம் அனைவருக்கும் தேவை. அனைவரும் மன அமைதியுடன் இருக்கவும், அன்றாட வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றவும் அன்பு தேவை என்றும் அன்பே உலகைக் குணப்படுத்தட்டும் என்றும் கூறியுள்ளார் ஆயர் Emmanuel Adetoyese Badejo

பிப்ரவரி 14 செவ்வாய்க்கிழமை புனித வேலண்டைன் திரு நாளை அன்பர்கள் நாளாக அகில உலகம் கொண்டாடி மகிழும் வேளையில்  வத்திக்கான் செய்திகளுக்கு இந் நாளைக்குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார் நைஜீரியாவில் உள்ள ஓயோ மறைமாவட்டத்தின் ஆயர், Emmanuel Adetoyese Badejo

நம் நாடும் உலகமும் எல்லா காயங்களிலிருந்தும் குணமடையவும், அறிவாற்றலுடன் செயல்படவும் ஒவ்வொரு இதயத்திலும் உண்மையான அன்பு தேவை என்று வலியுறுத்திய ஆயர் இம்மானுவேல், மிகவும் நியாயமான, இரக்கமுள்ள, மற்றும் அன்பான உலகத்தை மீண்டும் உருவாக்க இவ்வன்பு உதவும் என்றும் கூறியுள்ளார்.

பேராசை, சுயநலம், வன்முறை, வெறுப்பு அனைத்தையும் வெல்லும் திறன் படைத்த அன்பு எல்லா நிலையில் உள்ளவர்கள் மேலும் செலுத்தப்படவேண்டும் என்றும், அத்தகைய அன்புக்கு ஒருபோதும் முடிவு இல்லை என்றும் எடுத்துரைத்துள்ளார் ஆயர் இம்மானுவேல்.

அனைத்து வடிவங்களிலும் உண்மையான, உயிரைக் கொடுக்கும் அன்பின் முகவர்களாக நாம் மாற வேண்டும் என்று வலியுறுத்திய ஆயர் இம்மானுவேல் உலகை ஒளிரச் செய்யுங்கள், முன்னேறுங்கள், ஏனெனில் அன்பே கடவுள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2023, 14:22