தேடுதல்

பாரவோன் மன்னன் முன் மோசே மற்றும் ஆரோன் பாரவோன் மன்னன் முன் மோசே மற்றும் ஆரோன் 

தடம் தந்த தகைமை – பாம்பாக மாறிய ஆரோனின் கோல்

ஆண்டவர் கூறியவாறே மோயீசனும் ஆரோனும் பார்வோனிடம் சென்றனர். ஆண்டவர் இட்ட கட்டளைக்கிணங்க ஆரோன் தமது கோலைப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் விட்டெறிந்ததும், அது பாம்பாக மாறியது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இஸ்ரயேல் மக்களை மீட்க மோயீசனை முட்புதரினின்று அழைத்த ஆண்டவர் பார்வோன் மன்னனிடம் அவர்களை அனுப்பினார். மேலும் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் அருஞ்செயல் செய்யும் திறனையும் அளித்தார். அருஞ்செயல் ஒன்று காட்டி உங்களை மெய்ப்பியுங்கள்’ என்று பார்வோன் உங்களை நோக்கிக் கூறினால், நீ உன் கோலை எடுத்து, பார்வோன் முன்னிலையில் விட்டெறி. அது பாம்பாக மாறும்  என்றார் ஆண்டவர். ஆண்டவர் கூறியவாறே மோயீசனும் ஆரோனும் பார்வோனிடம் சென்றனர். ஆண்டவர் இட்ட கட்டளைக்கிணங்க ஆரோன் தமது கோலைப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் விட்டெறிந்ததும், அது பாம்பாக மாறியது. பார்வோன் மன்னனும் தன் ஞானிகளையும் சூனியக்காரர்களையும் வரவழைத்தான். எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும் தங்கள் கோல்களைப் பாம்பாக மாற்றினார்கள். அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கோலைக் கீழே இட, அவை பாம்புகளாக மாறின. ஆனால் ஆரோனின் கோல் அவர்கள் கோல்களை விழுங்கிவிட்டது. இருப்பினும் இதனைப் பார்த்து மன்னன் மனம் மாறவில்லை. மாறாக,  பார்வோன் மன்னின் மனம் மேலும் கடினப்பட்டது. ஆண்டவர் முன்னுரைத்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2023, 12:15