தடம் தந்த தகைமை - நிலத்தின் புழுதிகள் கொசுக்களாக
மெரினா ராஜ் – வத்திக்கான்
இஸ்ரயேல் மக்களை அனுப்ப பார்வோன் மன்னன் இரங்காததால் மீண்டும் ஆண்டவர் எகிப்து நாட்டை கொசுக்களால் வதைத்தார். ஆண்டவர் மீண்டும் மோசேயை நோக்கி, “நீ ஆரோனிடம், ‘நீ உன்கோலை நீட்டி, நிலத்திலுள்ள புழுதியை அடி! அது எகிப்து நாடெங்கும் கொசுக்களாக மாறும்’ என்று சொல்” என்றார். அவ்வாறே, அவர்களும் செய்தனர். ஆரோன் கோல் ஏந்திய தம் கையை நீட்டி நிலத்தின் புழுதியை அடித்தார். உடனே எகிப்து நாட்டின் மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொசுக்கள் தோன்றின. நிலத்திலுள்ள புழுதியெல்லாம் கொசுக்களாக மாறின. எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையால் அது போலவே செய்ய முயன்றனர்; ஆனால், அவர்களால் அதை செய்ய முடியவில்லை. கொசுக்கள் மனிதர் மேலும் விலங்குகள் மேலும் தங்கியிருந்து பெரும்சேதத்தை விளைவித்தன. ஆரோனும் மோசேயும் செய்ததைத் தங்களால் செய்ய இயலாததால் மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி, “இது கடவுளின் கைவன்மையே” என்றனர். ஆயினும் பார்வோனுடைய மனம் இரங்கவில்லை மாறாக இன்னும் அதிகமாகக் கடினப்பட்டது. ஆண்டவர் முன்னறிவித்தபடியே பார்வோன் மன்னன் மோசே வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கவில்லை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்