ஒருங்கிணைந்த பயணத்திற்கான கத்தோலிக்க பாதையைக் கண்டறியவேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நமது விருப்பமும் இலக்கும் ஒருங்கிணைந்த பயணத்திற்கான கத்தோலிக்க பாதையைக் கண்டறிவதில் இருக்கவேண்டும் என்றும், திருஅவையின் முக்கியமான தருணம் இந்த கண்டங்களளவில் நடக்கும் ஒருங்கிணைந்த பயணக் கூட்டம் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Mario Grech.
பிப்ரவரி 24 வெள்ளிக்கிழமை தாய்லாந்தின் பாங்காங்கில் தொடங்கிய ஆசிய கண்டத்திற்கான ஒருங்கிணைந்த பயணக் கூட்டத்தின் முதல் நாள் நிகழ்வில் பங்கேற்று திருத்தந்தையின் வாழ்த்துச்செய்தியை எடுத்துரைத்து பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார் ஆயர் மாமன்றத்தின் பொது செயலரான கர்தினால் Mario Grech.
ஒருங்கிணைந்த பயணத்திற்கான கத்தோலிக்க பாதையைக் கண்டறியவேண்டும் என்பதே நமது விருப்பம் மற்றும் இலக்கை அடைவதற்கான குறிக்கோள் என்றும், நமது ஒருங்கிணைந்த பயணம், இணைந்து செயல்படுதல், முதன்மை தலைமைத்துவம் என்பவற்றை எப்போதும் சொத்துக்களாக வைத்திருக்கும் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Grech.
மேலும் இவை கடவுளுடைய மக்கள், ஆயர் கல்லூரி, உரோம் ஆயர்கள் போன்ற செயல்பாடுகள் ஒவ்வொன்றின் மீது கட்டமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பயணச் செயல்முறையின் தேவையான மற்றும் பிரிக்க முடியாத கூறுகளாக திகழும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் கிரேக்.
ஆவணத்தின் உள்ளடக்கங்கள், கண்டத்தில் உள்ள தலத்திரு அவைகளில் வாழ்ந்து வரும் ஒருங்கிணைந்த பயணம் பற்றிய புரிதலுடன் ஒத்துப்போகின்றனவா என்பதைக் கண்டறியவேண்டும் என்றும், ஆயர் பேரவையின் இலக்கை நோக்கிய நமது பயணத்தில் இது ஒரு முக்கியமான தருணம், அதாவது திருஅவையின் சினோடல் வடிவத்தைப் பற்றிய முழுமையான புரிதல்களை வெளிப்படுத்தும் மேடை என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் கிரேக்
ஒருங்கிணைந்த பயணத் திருஅவை என்பது செவிமடுக்கும் திருஅவை என்றும், ஆர்வத்தோடு முழுமையாக திருஅவையில் பங்கேற்கும் மக்கள் மற்றும் அருள்பணியாளர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் வெற்றிக்கு வழிவகுக்கின்றது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் கிரேக்.
பொதுவான தெளிந்துதேர்தல்
கர்தினாலைத் தொடர்ந்து, பேரவையின் (Methodology Commission), உறுப்பினர் Dr Christina Kheng, பொதுவான தெளிந்துதேர்தல் பற்றி எடுத்துரைத்து ஆசியக் கண்டத்தின் தலத்திருஅவைகள் வரை இவ்வரைவுகள் சென்றடைய அனுமதிக்கப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தார்.
வெற்றுப் பக்கத்துடன், ஒரு திறந்தவெளியுடன் கூட்டத்திற்கு வருகின்ற நாம் தூய ஆவியானவரால், வழிநடத்தப்பட கடவுள் அனுமதிக்கிறார் என்றும், தூய ஆவியானவர் என்ன தூண்டுகிறார் என்பதை குழுவாக உணர்ந்துகொள்ளவும், பிரதிபலிக்கவும், கேளுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள், செபியுங்கள் என்றும் கிறிஸ்டினா விளக்கினார்.
தெளிந்து தேர்தலின் அடிப்படை
டாக்டர் கெங்கின் விளக்கக்காட்சியைத் தொடர்ந்து கிர்கிஸ்தானின் அப்போஸ்தலிக்க திருத்தூதரான இயேசுசபை அருள்பணியாளர் Anthony James Corcoran, விவேகம் பற்றிய விளக்கத்தைத் தொடர்ந்தார். தெளிந்து தேர்தலும் தூய ஆவியின் வரமும்" என்ற தலைப்பில் கடவுள் தனது உண்மையுள்ள மக்களுக்கு "நம்பிக்கையின் உள்ளுணர்வு என்ற பரிசை வழங்குகிறார் என்பதை நினைவுபடுத்தினார்.
இறுதியாக மதிப்பீடு செய்யப்பட்ட வரைவுகள் வாசிக்கப்பட்டுக் கலந்துரையாடப்பட்டன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்