தேடுதல்

மறைந்த ஆயர் David O’Connell மறைந்த ஆயர் David O’Connell  (VICTOR ALEMAN)

அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் துணை ஆயர் O’Connell மறைவிற்கு இரங்கல்

ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான இதயம் கொண்டவராக அமைதியை ஏற்படுத்துபவராக இருந்தவர் ஆயர் O’Connell

மெரினா ராஜ் வத்திக்கான்

அமைதியை ஏற்படுத்துபவராகவும், புலம்பெயர்ந்தோர் நீதிக்காகப் போராடும் வழக்கறிஞராகவும், திருஅவைக்கு பணியாற்றிய ஆயர் O’Connell அவர்களின் மறைவிற்கு  ஆழ்ந்த இரங்கலினை அமெரிக்க உயர் மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸின் துணை ஆயரான ஆயர் டேவிட் ஓ'கோனெல்  என்பவர் சனிக்கிழமை பிற்பகல் ஹசியெண்டா ஹைட்ஸ் புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் இறந்துள்ள வேளையில் அவரது இறப்பிற்கு அமெரிக்க உயர் மறைமாவட்டம் வருத்தம், தெரிவித்துள்ளது.

'ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான இதயம் கொண்டவர்.

லாஸ் ஏஞ்சல்ஸின் பேராயர் ஜோஸ் எச். கோம்ஸ் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஆயரின் மரணம் ஒரு கொலை என்று தீர்மானிக்கப்பட்டது என்றும், இச்செய்தியால் மிகுந்த மனவேதனையையும் வருத்தத்தையும் அடைந்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆயர் டேவிட் ஓ'கோனெல் அவர்கள், ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான இதயம் கொண்டவராக, அமைதியை ஏற்படுத்துபவராக இருந்தவர் என்றும், மனித வாழ்க்கையின் புனிதம், மாண்பு, போன்றவை மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும், உழைத்தவர் என்றும், அத்தகைய சமூகத்தை கட்டியெழுப்புவதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார் பேராயர் ஜோஸ் எச். கோம்ஸ்.

69 வயதான பிஷப் ஓ'கோனெலை ஒரு "நல்ல நண்பர்" என்றும் நினைவு கூர்ந்த பேராயர் கோம்ஸ், "லாஸ் ஏஞ்சல்ஸில் நாற்பத்தைந்து ஆண்டுகளாக அருள்பணியாளராகவும், பின்னர் ஆயராகவும் பணியாற்றிய ஆயர் டேவிட், அன்னை மரியாவின் மீது மிகுந்த அன்பைக் கொண்டிருந்தவர் ஆழ்ந்த ஜெபத்தில் இருந்தவர்" என்றும் கூறினார்.

மறைந்த பிஷப் ஓ'கோனெல் 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி அயர்லாந்தின் கார்க்கில் பிறந்தார். டப்ளினில் உள்ள ஆல் ஹாலோஸ் கல்லூரியில் இறையியல் பயின்றார், மேலும் 10 ஜூன் 1979 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் மறைமாவட்டத்திற்கு அருள்பணியாளராக நியமிக்கப்பட்டார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 21 ஜூன் 2015 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2023, 15:25