தேடுதல்

மனாகுவா ஆயர் Silvio Jose Baez மனாகுவா ஆயர் Silvio Jose Baez   (AFP or licensors)

பன்னாட்டுச் சட்டத்தை மீறுகிறது நிக்கராகுவா அரசு: சட்டவல்லுனர்கள்

நிக்கராகுவா அதிகாரிகளின் நடவடிக்கைகள் பன்னாட்டுச் சட்டத்தையும், குறிப்பாக நிக்கராகுவாவை உள்ளடக்கிய 1961-ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தையும் மீறுவதாகக் சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நிக்கராகுவா அரசு, மனாகுவா ஆயர் Silvo Jose Baez  மற்றும் Matagalpa-வின் அருள்பணியாளர் Uriel Vallejos, உள்பட 94 பேரின் குடியுரிமையை பறித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 10, வெள்ளிக்கிழமையன்று, மானாகுவாவிலிருந்து அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அரசியல் காரணங்களுக்காக நாடுகடத்தப்பட்ட 222 சிறைக்கைதிகளுடன் குடியுரிமை பறிக்கப்பட்ட இந்த 94 பெரும் சேர்க்கபட்டுள்ளதாகவும் மேலும் செய்திகள் கூறுகின்றன.

இவர்கள் அனைவரும் தாய்நாட்டிற்குத் துரோகம் இழைத்தவர்கள் மற்றும் தவாறான தகவல்களைப்  பரப்பியவர்கள் என்று கூறியுள்ள மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Ernesto Rodriguez, இவர்களுடன் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தப்பி ஓடியவர்கள் அனைவரின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

நிக்கராகுவா அதிகாரிகளின் இந்த நடவடிக்கை பன்னாட்டுச் சட்டத்தையும்,  குறிப்பாக, நிக்கராகுவாவை உள்ளடக்கிய 1961-ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தையும் மீறுவதாகக் சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட 222 பேருக்கும், ஸ்பெயின் நாடு ஏற்கனவே குடியுரிமை வழங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2023, 14:49