தேடுதல்

படைவீரர்களுடன் இஸ்ரயேல் மக்களை நெருங்கிய பார்வோன்  படைவீரர்களுடன் இஸ்ரயேல் மக்களை நெருங்கிய பார்வோன்  

தடம் தந்த தகைமை – இஸ்ரயேல் மக்களை துரத்திய பார்வோன் படை

தேர்ந்தெடுக்கப்பட்ட அறுநூறு தேர்களையும், மற்றும் எகிப்திலிருந்த எல்லாத் தேர்களையும், அவற்றின் படைத்தலைவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேலரை நோக்கிப் புறப்பட்டான் பார்வோன் மன்னன்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

எகிப்தை விட்டு வெளியேறி கானான் நாடு நோக்கிச் சென்று கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களை மிக்தோலுக்கும் பாகால் செபோனின் அருகிலுள்ள கடலுக்கும் இடையே அமைந்த பிககிரோத்துக்கு எதிரே, கடல் அருகில் பாளையம் இறங்கும்படி ஆண்டவர் கூறினார். பாலைநிலம் குறுக்கிட்டதால் இஸ்ரயேல் மக்கள் இன்னும் நாட்டிற்குள்ளேயே அலைந்து கொண்டிருப்பார்கள் என்று பார்வோன் மன்னன் கருதினான். மக்கள் ஓடிப்போய் விட்டார்கள் என எகிப்திய மன்னனுக்கு அறிவிக்கப்பட்டபோது, பார்வோனின் மனமும் அவன் அலுவலர் மனமும் மக்களைப் பொறுத்தமட்டில் மாற்றம் கண்டது. “நாம் இப்படிச் செய்து விட்டோமே! நமக்கு ஊழியம் செய்த இஸ்ரயேலரை ஏன் அனுப்பிவிட்டோம்?” என்று அவர்கள் பேசிக்கொண்டனர். எனவே, அவன் தன் தேரைப் பூட்டித் தன் ஆள்களையும் கூட்டிக்கொண்டு கிளம்பினான். பார்வோனின் மனத்தை ஆண்டவர் இறுகிப்போகச் செய்ததால் அவன் இஸ்ரயேலர்களைத் துரத்திக்கொண்டே வந்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுநூறு தேர்களையும், மற்றும் எகிப்திலிருந்த எல்லாத் தேர்களையும், அவற்றின் படைத்தலைவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டான். இஸ்ரயேல் மக்களோ வெற்றிக்கை உயர்த்தியவாறு சென்றுகொண்டிருந்தனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், படை ஆகிய அனைத்தோடும் எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்று பிககிரோத்தின் எதிரே கடலின் அருகில் பாளையம் இறங்கியிருந்த இஸ்ரயேல் மக்களை நெருங்கினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2023, 10:51