தேடுதல்

சிறாருக்கு உதவும் மனிதர் சிறாருக்கு உதவும் மனிதர்  

ஹாங்காங் மறைமாவட்ட தவக்கால தொண்டுப் பணிகள்

மறுவாழ்வு மையங்கள், சமூக மேம்பாடு, கல்வி, பாலர் பள்ளி, சிறப்பு கல்வி, தொழில் பயிற்சி, மருத்துவப்பணி ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் ஹாங்காங் மறைமாவட்டம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

சிறாருக்கு இலவச உணவு வழங்குதல், முதியோர்கள் தங்கியிருக்கும் வீடுகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை தொண்டுப்பணிகளாக செய்து, அன்பான செயல்களினால் மற்றவர்களுக்கு உதவிவருகிறது ஹாங்காங் மறைமாவட்டத்தின் தவக்காலத் தொண்டு நிறுவனம்

மார்ச் முதல் நாள் சாம்பல் புதனன்று தொடங்கி ஏப்ரல் மாதம் 9 ஆம் நாள் உயிர்ப்புப் பெருவிழாவுடன் தவக்காலம் முடிய இருக்கும் நிலையில், சிறார் பராமரிப்பு, இளையோர், சமூகம், முதியோர், குடும்பம், போன்றவர்களுக்கான பணிகளை மறைமாவட்டத்தின் காரித்தாஸ் அமைப்புடன் இணைந்து செய்து வருகின்றது ஹாங்காங் மறைமாவட்டத்தின் தவக்காலத் தொண்டு நிறுவனம்.

ஹாங்காங் மறைமாவட்டத்தின் தவக்கால நிதி திரட்டும் குழு, தொண்டுப்பணிகளை நடைமுறைப்படுத்த, எளிய மற்றும் உறுதியான செயல்பாடுகளை முன்மொழிந்து அன்பான செயல்களில் மற்றவர்களுக்கு உதவுங்கள்" என்று வலியுறுத்தி வருவதுடன் மறுவாழ்வு மையங்கள், சமூக மேம்பாடு, கல்வி, பாலர் பள்ளி, சிறப்பு கல்வி, தொழில் பயிற்சி, உயர் கல்வி, மருத்துவப்பணி ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகின்றது. 

உயிர்ப்பை வெளிப்படுத்தும் செம்மறி ஆட்டுக்குட்டி வடிவ காகித பைகள் மற்றும் பெட்டிகள் ஹாங்காங்கில் உள்ள பல தலத்திருஅவைகளில் ஞாயிற்றுக்கிழமை காணிக்கைகளை சேமிக்க சிறாருக்கு வழங்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு நாளும் இணையதளத்தில் விளையாடி நேரத்தை வீணடிப்பதையும், அதிக நேரம் தொலைபேசி உபயோகிப்பதையும் குறைக்க, தவக்காலத்தை சிறப்பான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள சிறாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு சில பங்குத்தளங்களில் தேவையில் இருக்கும் வயதானவர்களுக்கு இலவசமாக இல்லத்தை சுத்தம் செய்யும் பணியினையும் செய்துவரும் தன்னார்வலர்கள், முதியோர் மற்றும் தனிமையில் இருப்பவர்களின் வீடுகளுக்கு இருவர் இருவராகச் சென்று அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆன்மீக ஆறுதல் அளித்து அவர்களின் வீடுகளை முழுமையாக சுத்தம் செய்து வருகின்றனர்.

தவக்காலத்தில், குடும்பத்திற்கான மறைமாவட்ட மேய்ப்புப்பணி ஆணையம், கிறிஸ்தவ மக்கள் தவக்காலப் பயணத்தை சாதாரண குடும்ப வாழ்க்கையிலும் வாழ உதவும் வகையில்  ஆலோசனைகளையும் பொருளாதார உதவிகளையும் மேய்ப்புப்பணி ஆணையத்தின் வழியாக வழங்கி வருகின்றது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 March 2023, 14:09