ஆஸ்திரேலிய கத்தோலிக்கர்கள் குறித்த புள்ளிவிவரம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
2021ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஆஸ்திரேலியாவில் கத்தோலிக்கர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை ஏப்ரல் 17, இத்திங்களன்று வெளியிட்டுள்ளது தலத்திருஅவை.
ஆஸ்திரேலியாவின் மேய்ப்புப்பணி ஆய்வுகளுக்கான தேசிய மையத்தின் அறிக்கையின்படி, 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 53 இலட்சமாக இருக்க, 2021ஆம் ஆண்டிலேயோ இது 51 இலட்சமாகக் குறைந்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஆஸ்திரேலிய ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Timothy Costelloe, உண்மை விவரங்களை விரல் நுனியில் கொண்டுச் செயல்படுவது கத்தோலிக்க மறைமாவட்டங்களுக்கும், பங்குதளங்களுக்கும் ஏனைய பணிகளுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்ற மகிழ்ச்சியை வெளியிட்டார்.
தற்போதைய புள்ளிவிவரங்கள் ஏமாற்றம் தருவதாக இருந்தாலும், பங்குத்தளமக்களின் கலாச்சார, மற்றும் மொழிவாரி இடைவெளிகளைப் புரிந்துகொண்டு பணியாற்ற உதவுகிறது என்றார் பேராயர் Costelloe.
கத்தோலிக்கப் பள்ளிகளில் பயிலும் மற்றும் உயர்கல்விக்குச் செல்லும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற மகிழ்ச்சியையும் வெளியிட்ட பேராயர், நாட்டில் தங்களை கத்தோலிக்கர்கள் என வெளிப்படுத்தியுள்ளவர்களுள் 21 விழுக்கட்டினர் ஆங்கிலம் பேசாத நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் எனத் தெரிய வந்துள்ளது, அவர்களிடையான பணியை திட்டமிட்டு ஆற்ற உதவுகிறது என மேலும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்