தடம் தந்த தகைமை – ஆரோனையும் அவர் புதல்வர்களையும் தேர்ந்தெடுத்தல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆரோனையும் அவன் புதல்வர்களையும் திருநிலைப்படுத்தும் முறையாக ஆண்டவர் கூறியது. எனக்குக் குருத்துவப் பணி புரிய நீ அவர்களைத் திருநிலைப்படுத்த இவ்வாறு செய். ஓர் இளங்காளையையும் குறைபாடற்ற இரு செம்மறிக்கிடாய்களையும் தேர்ந்தெடு. சிறந்த கோதுமை மாவினால் புளிப்பற்ற அப்பம், எண்ணெயில் பிசைந்த புளிப்பற்ற நெய்யப்பம், எண்ணெய் தோய்ந்த புளிப்பற்ற மெல்லிய அடைகள் ஆகியவற்றைச் செய்து, ஒரு கூடையில் இட்டு, கூடையோடு அவற்றை எடுத்துவா. மேலும், அந்தக் காளையையும் இரு செம்மறிக்கிடாய்களையும் கொண்டு வா. சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் ஆரோனையும் அவன் புதல்வரையும் அருகில் வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவு. உடைகளை எடுத்து வந்து கோடிட்ட உள்ளாடை, ஏப்போதின் அங்கி, ஏப்போது, மார்புப்பட்டை இவற்றை ஆரோனுக்கு அணிவித்து ஏப்போதின் கைவண்ணமிக்க கச்சையால் கட்டுவாய். அவன் தலைமேல் தலைப்பாகையை வைத்து அதன் மேல் புனித மணிமுடியையும் வை. திருப்பொழிவு எண்ணெயை எடுத்துவந்து, அவன் தலைமேல் ஊற்றி அவனுக்கு அருள்பொழிவு செய். அவன் புதல்வரையும் கூட்டி வந்து, அவர்களுக்கும் ஆடைகள் அணிவிப்பாய். ஆரோனுக்கும், அவன் புதல்வருக்கும் இடைக்கச்சைகள் கட்டி, அவர்களுக்கும் தலைப்பாகைகள் அணிவி. குருத்துவப்பணி என்றுமுள்ள நியமமாக அவர்களோடு இருக்கும். இவ்வாறாக, ஆரோனையும் அவன் புதல்வரையும் திருநிலைப்படுத்துவாய் என்றார் ஆண்டவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்