தேடுதல்

காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்தோனேசியாவில் பெருவெள்ளம் காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்தோனேசியாவில் பெருவெள்ளம்   (AFP or licensors)

காலநிலை மாற்றத்திற்கு எதிரான தீவிர நடவடிக்கைகள்

உலக அளவில் சிறப்பிக்கப்படும் Laudato Si’ வாரம், ‘பூமிக்கான நம்பிக்கை, மனித குலத்திற்கான நம்பிக்கை’ என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆண்டுதோறும் சிறப்பிக்கப்படும் Laudato Si’ வாரத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், காலநிலை மாற்றத்திற்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

காலநிலை நெருக்கடிகளைக் களைவதற்கு உடனடி நடவடிக்கைகள் தேவை என அழைப்புவிடுத்த பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத்தலைவர், ஆயர் Pablo Virgilio David அவர்கள், நம் பொது இல்லமாகிய இவ்வுலகை அச்சுறுத்திவரும், காலநிலை மாற்ற நெருக்கடியை சமாளிப்பதற்கு அனைவரின் ஒன்றிணைந்த நடவடிக்கைத் தேவை என்பதை வலியுறுத்தினார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் திருத்தந்தையின் Laudato Si’ ஏடு வெளியிடப்பட்டதன் எட்டாம் ஆண்டில் இடம்பெறும் இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தில் அனைத்து பிலிப்பீன்ஸ் மக்களும் பங்கெடுக்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளார் பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர்.

மே மாதம் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை ஒருவாரத்திற்கு உலக அளவில் சிறப்பிக்கப்படும் Laudato Si’ வாரம், ‘பூமிக்கான நம்பிக்கை, மனித குலத்திற்கான நம்பிக்கை’ என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2023, 13:21