தேடுதல்

நிக்கராகுவா மக்கள் நிக்கராகுவா மக்கள்  (AFP or licensors)

நிக்கராகுவாவில் மூடப்பட்ட கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்

மனாகுவா உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த தத்துவஇயல் மற்றும் இறையியல் படிப்பிற்கான அமலஉற்பவ அன்னைக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் சட்டப்பூர்வமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தத்துவ இயல் மற்றும் இறையியல் பட்டப்படிப்பிற்கான அமலஉற்பவ அன்னை கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் தன்னார்வ முறையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நிக்கராகுவா நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டில், நிக்கராகுவா அதிகாரிகள், அவர்களை எதிர்ப்பவர்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வழியாக "தன்னார்வ" முறையின் கீழ் மேலும் 17 தனியார் பல்கலைக்கழகங்களை மூடிவிட்ட நிலையில் மே 18 வியாழனன்று நிக்கராகுவாவில் உள்ள மற்றொரு கத்தோலிக்க பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Ucicam என்றழைக்கப்படும் அமல உற்பவ அன்னைக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், மத்திய அமெரிக்காவில் உள்ள பல்வேறு உள்ளூர் தலத்திருஅவைகளில் இருந்து வரும் மக்களின் கருத்தரங்குகளுக்கான பயிற்சி மையமாகவும், தத்துவம் மற்றும் இறையியலில் பட்டப்பயிற்சி அளிக்கும் மையமாகவும் திகழ்ந்தது. இது மனாகுவாவில் உள்ள La Purísima குருத்துவப் பயிற்சி இல்லத்திற்கு நிகராக செயல்பட்டு வந்தது.

நிக்கராகுவாவில், பேராயர் ஆல்வாரெஸ் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் குடியுரிமை பறிக்கப்பட்டு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் திருப்பீடத்தூதர் பேரருள்திரு Marcel Diouf அவர்களும் நாட்டிலிருந்து மார்ச் 17ஆம் நாள் வெளியேறினார்.

இவ்வாரம் வெளியிடப்பட்ட அமெரிக்க வெளியுறவுத்துறையின் மத சுதந்திரம் பற்றிய 2022ஆம் ஆண்டு அறிக்கையானது "நீதித்துறை அதிகாரிகளின் வெளிப்படைத்தன்மையின்மை பேராயர் ஆல்வாரெஸ் அவர்களின் தடுப்புக்காவலில் உள்ள நிச்சயமற்ற தன்மைக்கு பங்களிக்கிறது என்று குறிப்பிடுகிறது.

மேலும், குற்றவாளிகள், அரசிற்கு எதிராக திட்டம் தீட்டுபவர்கள், வன்முறையைத் தூண்டுபவர்கள் என்று குற்றம் சாட்டி, அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்கள் கைது செய்யப்பட்டும், நாடுகடத்தப்பட்டும் பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2023, 12:04