தேடுதல்

தூய ஆவியார் தூய ஆவியார்  

நேர்காணல் - பெந்தேகோஸ்து பெருவிழா

பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் நடக்க காரணம் தூய ஆவியின் செயல்பாடே..
பெந்தேகோஸ்து பெருவிழா - அருள்பணி A. கிறிஸ்து ராஜ். msfs

மெரினா ராஜ் – வத்திக்கான்

தூய ஆவியின் பங்கு திருஅவையின் வரலாற்றில் மிக முக்கியமானது. திருஅவை வரலாற்றில் மட்டுமல்ல, உலகத்தின் தொடக்கத்தில் இந்த பூமியானது வெறுமையற்று இருந்தபோது அதில் உலாவிக் கொண்டிருந்தது தூய ஆவியின் ஆற்றலே என்று நாம் விவிலியத்தின் முதல் பகுதியில் வாசிக்க கேட்டிருக்கின்றோம். உலகத்தின் தொடக்கம் தொடக்கமும் முடிவுமாக இருப்பவர் தூய ஆவியே. பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் நடக்க காரணமும் தூய ஆவியின் செயல்பாடே. தாயாம் திருஅவையானது தூய ஆவியின் பெருவிழாவினை திருவருட்சாதனங்களின் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்ற வேளையில் நமது இன்றைய நேர்காணலில் பெந்தேகோஸ்து பெருவிழா பற்றிய கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி கிறிஸ்து ராஜ். புனித பிரான்சிஸ் சலேசியார் மறைப்பரப்புப் பணியாளர்கள் சபையைச் சேர்ந்த அருள்பணி. A கிறிஸ்து ராஜ் அவர்கள் இளையோர் பணியில் முதுகலைக்கல்வியையும் (MTh) ‘‘சமூக ஊடகங்கள் மற்றும் இளையோர்‘‘ என்ற தலைப்பில் சமூகவியியலில் (Sociology) முனைவர் பட்டமும் பெற்றவர். தென்கிழக்கு இந்தியாவின் பிரான்சேலியன் இளையோர் அமைப்பின் இயக்குநர், பங்குபணியாளர், சிறார், இளையோர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்க்கு  ஆலோசனைகளையும் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கருத்தரங்குகளையும் தியான சிந்தனைகளையும் வழங்கிக் கொண்டிருப்பவர். தற்போது அருள்பணி.  A கிறிஸ்து ராஜ் அவர்கள் தர்மபுரி மறைமாவட்டத்தில் உள்ள, நலம் போதை ஒழிப்பு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இம்மையத்தின் நலம் வலைதளம் நாள்தோறும் 2 நிமிட குணமளிக்கும் ஆராதனையைச் செய்து வருகின்றது.

தூயஆவியின் வரங்களைப் பெறும் திருத்தூதர்கள்
தூயஆவியின் வரங்களைப் பெறும் திருத்தூதர்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2023, 09:55