நேர்காணல் - இளையோர்க்கான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
உற்சாகம் துடிப்பு, மகிழ்ச்சி ஒழுக்கம் இவை அனைத்தும் நிறைந்தது இளமை. எனவே ஆற்றல் நிறைந்த இளமையில் செய்ய விரும்புவதை சிறப்பாக செய்து மன நிறைவுடன் வாழ்ந்து விட வேண்டும். காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நாம் வீணடிக்கும் ஒவ்வொரு நேரமும் காலமும் பொன் போன்றது. ஆற்றலையும் ஆர்வத்தையும் அதிகமாகக் கொண்ட இவ்விளமைக்காலத்தை சரியாவன வழிகாட்டுதல்களின்படி முன்னோக்கிக் கொண்டு செல்ல திருஅவை வழியாகவும் தலத்திருஅவை வழியாகவும் அப்ல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இளையோர்க்கான வேலைவாய்ப்பு திட்டங்கள் வழங்கும் வின் அகாடமி பற்றி இன்றைய நாளில் நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி மை.பா. ஜேசுராஜ்.
2000 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை மறைமாவட்ட அருள்பணியாளாராகத் திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணி மைபா ஜேசுராஜ் அவர்கள், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக போராடும் மக்களுள் ஒருவர். மக்கள் தங்களது வாழ்வின் உரிமை, வாழ்வாதாரம், முன்னேற்றம் ஆகியவற்றைப் பெற்று எல்லா நலத்துடனும் வளாத்துடனும் வாழ பல்வேறு இயக்கங்கள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர்.. வின் அகாடமி என்னும் அமைப்பின் வழியாக கிறிஸ்தவ இளையோர்க்கான வேலைவாய்ப்புக்க்களை ஏற்படுத்தி சிறப்புடன் பணியாற்றிக் கொண்டிருப்பவர். தற்போது பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் உள்ள கல்வெட்டாங்குடி புனித அந்தோணியார் பங்குத்தளத்தில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அருள்பணி மை.பா. ஜேசுராஜ் அவர்களை வின் அகாடமி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்