பழம்பெரும் கீழைத் திருஅவைக்குப் புதிய தலைவர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பழம்பெரும் கீழைத் திருஅவையின் தலைவராக முதுபெரும் தந்தை Mar Georges மூன்றாம் Younan அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜூன் 9, வெள்ளிக்கிழமையன்று, பாக்தாத்திலுள்ள புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற விழாவில், கீழைத் திருஅவைக்கானத் தலைவராக முதுபெரும் தந்தை Mar Georges மூன்றாம் Younan அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் ஈராக்கின் கல்தேய கத்தோலிக்க வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் இரஃபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள், புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட முதுபெரும் தந்தை Mar Georges மூன்றாம் Younan அவர்களைச் சந்தித்து அவர் பணிச் சிறக்க வாழ்த்தினார்.
இப்பழம்பெரும் கீழைத் திருஅவையானது 1960-களில் கிழக்கு அசிரியன் திருஅவையிலிருந்து உதித்தது என்றும், இவ்விரு திருஅவைகளும் தொடக்க கால கிறிஸ்தவர்களிடமிருந்து பிறந்தவை என்றும் கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் இந்த இரண்டு திருஅவைகளும் ஆசியா முழுவதிலும், ஈரான் முதல் இந்தியா மற்றும் சீனா வரையிலான மறைமாவட்டங்களைப் பெருமைப்படுத்திய, ஒரு தொடக்க கால கிறிஸ்தவப் பிரிவான, வரலாற்றுச் சிறப்புமிக்க கீழைத் திருஅவையிலிருந்து தாங்கள் வந்ததாகக் கூறிக்கொள்கின்றன. இன்று, அதன் ஆதரவாளர்கள் முக்கியமாக ஈராக் மற்றும் ஈராக்கிய புலம்பெயர் நாடுகளில் காணப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்