தேடுதல்

பங்களாதேஷ் மறைமாவட்ட அருள்பணியாளர்கள் பங்களாதேஷ் மறைமாவட்ட அருள்பணியாளர்கள் 

பங்களாதேஷ் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கான கருத்தரங்கம்

குருத்துவம் என்பது கடவுளன்பின் மிகச்சிறப்பான அழைப்பு என்றும், அந்த அழைப்பிற்கு இயேசுவின் அன்பு இதயம் கொண்டு செவிசாய்க்க வேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

தலத்திருஅவை அருள்பணியாளர்கள், துறவறத்தார் என பல்வேறு நிலைகளில் மேய்ப்புப்பணிகளைச் செய்யும் அனைவரும் கிறிஸ்தவ மத போதனைகளை எடுத்துரைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், அது பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் ஆயர்  Gervas Rozario

ஜூலை 11 முதல் 14 வரை டாக்காவில் உள்ள தூயஆவி குருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பங்களாதேஷ் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கான ஆண்டுக் கூட்டத்தின் போது இவ்வாறு கூறியுள்ளார் பங்களாதேஷ் Rajshahi மறைமாவட்ட ஆயர் Gervas Rozario.

ஏறக்குறைய 200 மறைமாவட்ட அருள்பணியாளர்கள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கில் Mymensingh மறைமாவட்ட ஆயர் Ponen Paul Kubi, Rajshahi மறைமாவட்ட ஆயர் Gervas Rozario,  Khulna மறைமாவட்ட ஆயர் James Romen Boiragi,  Dinajpur மறைமாவட்ட ஆயர் Sebastian Tudu  , Barisal  மறைமாவட்ட ஆயர் Emmanuel Rozario  ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறைமாவட்ட அருள்பணியாளர்களிடையே உடன்பிறந்த உறவு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற அருள்பணியாளர்கள் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

குருவாக  திருப்பொழிவு பெற்று 25 ஆண்டுகளை நிறைவு செய்த அருள்தந்தை எலியாஸ் மொண்டல் அவர்கள், அருள்பணித்துவம்/குருத்துவம் என்பது கடவுளன்பின் மிகச்சிறப்பான அழைப்பு என்றும், அந்த அழைப்பிற்கு இயேசுவின் அன்பு இதயம் கொண்டு செவிசாய்க்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

அருள்பணியாளர்களாகிய எங்களின் உறவு இரத்த உறவு அல்ல, மாறாக இதயம் மற்றும் ஆன்மாவின் உறவு, அதை ஒருபோதும் உடைக்க முடியாது என்றும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் Barisal  மறைமாவட்ட ஆயர் Emmanuel Rozario.

நான்கு நாள்கள் நடைபெற்ற இந்த வருடாந்திர கருத்தரங்கானது, பொது கலந்துரையாடல், மதிப்பீடுகள் மற்றும் அடுத்த ஆண்டுக்கான திட்டமிடல் ஆகியவற்றுடன் நிறைவு பெற்றது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2023, 11:47