தேடுதல்

அரசர் சாலமோன் அவையில் பத்சேபா அரசர் சாலமோன் அவையில் பத்சேபா 

தடம் தந்த தகைமை – அதோனியாவிற்காக பரிந்துபேசும் பத்சேபா

“அரசர் சாலமோன் உம் சொல்லைத் தட்டமாட்டார். சூனேமைச் சார்ந்த அபிசாகை எனக்கு மணமுடித்து வைக்கும்படி அவரிடம் சொல்லும்” என்றான். அதற்குப் பத்சேபா, “நல்லது; நான் உனக்காக அரசரிடம் பரிந்து பேசுகிறேன்” என்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தாவீது தம் மூதாதையருடன் துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார். தாவீது இஸ்ரயேலின் மீது ஆட்சி செலுத்திய காலம் நாற்பது ஆண்டுகள். அவர் எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினார். சாலமோன் தம் தந்தை தாவீதின் அரியணையில் அமர்ந்தார். அவருடைய ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டது. அகித்தின் மகன் அதோனியா சாலமோனின் தாய் பத்சேபாவிடம் வந்தான். “நீ வருவதன் நோக்கம் என்ன? சமாதானமா?” என்று அவர் கேட்டார். அதற்கு அவன், “ஆம்; சமாதானமே” என்றான். பிறகு அவன், “நான் உம்மிடம் ஒன்று சொல்லவேண்டும்” என்றான். அவரும் “சொல்” என்றார்.

அதற்கு அவன், “அரசுரிமை என்னுடையதே. நான் அரசனாக வேண்டும் என்று இஸ்ரயேல் மக்கள் அனைவரும் விரும்பினர். இது உமக்குத் தெரிந்ததே. ஆனால், நடந்தது வேறு. அரசுரிமை என் சகோதரனுக்குப் போய்விட்டது. அது ஆண்டவரின் திருவுளம். ஆயினும், உம்மிடம் ஒன்று வேண்டிக் கொள்ள விரும்புகிறேன். அதை நீர் எனக்கு மறுக்கக்கூடாது” என்றான். அதற்கு அவர், “அது என்ன? சொல்” என, அவன், “அரசர் சாலமோன் உம் சொல்லைத் தட்டமாட்டார். சூனேமைச் சார்ந்த அபிசாகை எனக்கு மணமுடித்து வைக்கும்படி அவரிடம் சொல்லும்” என்றான். அதற்குப் பத்சேபா, “நல்லது; நான் உனக்காக அரசரிடம் பரிந்து பேசுகிறேன்” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2023, 12:24