தேடுதல்

தூய பனிமய அன்னை தங்கத்தேர் தூய பனிமய அன்னை தங்கத்தேர்  

நேர்காணல் – தூத்துக்குடி பனிமய மாதா தங்கத்தேர் திருவிழா

உரோம் நகரின் பாதுகாவலியாக திகழும் மேரி மேஜர் கோவிலில் இருக்கும் அன்னையின் பெயரால் உருவானதே தூய பனிமய அன்னை பக்தி.
நேர்காணல் - அருள்பணி குமார் ராஜா

மெரினா ராஜ் – வத்திக்கான்

தியாகம் என்ற சொல்லின் அர்த்தம் தான் தாய். நமது கனவை நனவாக்க தனது கனவை உரமாக்கியவர். நமது நம்பிக்கைச்செடி வளர தனது வேர்வைத்துளிகளையும் பாச நிலத்தையும் தந்தவர். அன்பு இரக்கம் தியாகம் கொண்ட அத்தனை தாயுள்ளத்திற்கும் மேலானவர் அன்னை மரியா. அன்னை மரியாவிற்கு பல பெயர்களும் அப்பெயர்களில் பல ஆலயங்களும் உண்டு. அவற்றுள் ஒன்று தான் தூத்துக்குடி தூய பனிமய அன்னை ஆலயம். உரோம் நகரின் பாதுகாவலியாக திகழும் மேரி மேஜர் கோவிலில் இருக்கும் அன்னையின் பெயரால் உருவானதே  தூய பனிமய அன்னை பக்தி. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள தூய பனிமய அன்னை ஆலயத் தங்கத்தேர் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அதனைக்குறித்த தகவல்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி குமார் ராஜா.

தூத்துக்குடி மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணியாளர் குமார் ராஜா அவர்கள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர், மறைமாவட்டக் கத்தோலிக்கப் பள்ளிகளின் கண்காணிப்பாளர், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் என பதினெட்டு ஆண்டுகள் கல்விப் பணிக்குப் பின்னர், மூன்று ஆண்டுகள் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் டிவைன் மெர்சி தியான இல்லத்தின் இயக்குநராக நற்செய்திப் பணியாற்றியவர். தற்பொழுது தூத்துக்குடி தூய பனிமய மாதா பசிலிக்கா பேராலய அதிபராகவும், பங்குத் தந்தையாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். விவிலிய இறையியல், சமூகவியல், முதலியவற்றில் முதுகலைப் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் கல்வியியல் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர். "உமக்கு மட்டும்","உமக்கே புகழ்","உம்மோடு வாழ" என்னும் மூன்று இசை ஒலிப் பேழைகளையும், "பெருமைப்படுகிறேன்-கத்தோலிக்கத் திருச்சபை பற்றிய 100 பெருமித உண்மைகள்" என்னும் ஆவணக் குறுந்தகட்டையும் படைத்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் ஐநூறுக்கும் அதிகமான தியானங்கள், விவிலியப் பாசறைகள், கல்வியியல் பயிற்சிகள் நடத்தியுள்ள அருள்பணி குமார் ராஜா அவர்கள், இதுவரை 23 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் இறைமொழி விருந்து, நான் வளர்கிறேனே. மனமே மலர்ந்திடு, எல்லா வேளையிலும், இயேசுவைப் போல, உறவுகள் மலரட்டுமே, இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். உறவின் உயரங்கள், பரிவின் பரிமாணங்கள், இறைமொழி மருந்து என்னும் பத்து நூல்கள் வைகறைப் பதிப்பகத்தின் வெளியீடுகளாகும்.

பனிமய அன்னை
பனிமய அன்னை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2023, 11:11