தேடுதல்

புனித லொயோலா இஞ்ஞாசியார் புனித லொயோலா இஞ்ஞாசியார்  

பல்சுவை புனித லொயோலா இஞ்ஞாசியார்

எடுத்து வாசி என்ற ஒற்றை வரியினால் கவரப்பட்டு தன் வாழ்க்கையையே பிறர் வாசிக்கும் புத்தகமாக மாற்றியவர் புனித இஞ்ஞாசியார்.
புனித லொயோலா இஞ்ஞாசியார் - அருள்பணி புகழ் சே.ச.

மெரினா ராஜ் – வத்திக்கான்

 நானே உலகின் ஒளி என்னைப் பின்செல்பவர் இருளில் நடவார். உயிரின் ஒளியைக் கொண்டிருப்பார் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு வாழ்க்கை வடிவம் கொடுத்தவர்கள் புனிதர்கள். அதிலும் எடுத்து வாசி என்ற ஒற்றை வரியினால் கவரப்பட்டு தன் வாழ்க்கையையே பிறர் வாசிக்கும் புத்தகமாக மாற்றியவர் புனித இஞ்ஞாசியார். ஜூலை 31 அன்று இயேசுசபையை நிறுவிய புனித லொயோலா இஞ்ஞாசியாரின் திருவிழாவைக் கொண்டாட நம்மைத் தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில் அப்புனிதர் பற்றிய கருத்துக்களை இன்றைய நம் பல்சுவையில் காணலாம்.

புனித லொயோலா இஞ்ஞாசியார் பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி புகழ். இயேசுசபையின் சென்னை மறைமாநிலத்தைச் சார்ந்த அருள்பணி புகழ் அவர்கள், திருஇருதய தூதன் பத்திரிக்கை ஆசிரியராக ஓர் ஆண்டும், தமிழக பாதைகள் பத்திரிக்கையின் ஆசிரியராக மூன்று ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார். தற்போது தமிழக இயேசு சபையின் சென்னை  மறைமாநிலத்தின் ஊடகப்பணி ஒருங்கிணைப்பாளர், ஊடக மையம் மற்றும் செவ்வானம் பதிப்பகத்தின் இயக்குனர், திருத்தந்தையின் உலகளாவிய செபக்கூட்டமைப்பு மற்றும் நற்கருணை இளையோர் இயக்கத்தின் வட்டார இயக்குனர் என பல பணிகளைத் திறம்பட செய்து வருகின்றார். எடுத்து வாசி, க.க.க.போ., விண்ணைத்தொட்ட இயேசு சபையாளர்கள், தோள்கொடுக்க வா என்பன போன்ற நூல்களின் ஆசிரியர். தற்போது சம்மனசுக்களின் இராக்கினியே செப மையத்தில் வசித்து வரும் தந்தை அவர்களை புனித லொயோலாஇஞ்ஞாசியார் பற்றி எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2023, 17:25