தேடுதல்

பெத்சமேசுவுக்குத் திரும்பும் ஆண்டவரின் பேழை! பெத்சமேசுவுக்குத் திரும்பும் ஆண்டவரின் பேழை! 

தடம் தந்த தகைமை : பெத்சமேசுவுக்குத் திரும்பிய ஆண்டவரின் பேழை!

பெத்சமேசின் மக்கள் அன்றையதினம் எரி பலிகளையும் வேறு பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பெலிஸ்தியர் அர்ச்சகர்கள் கூறியவாறே செய்தனர். இரு கறவைப் பசுக்களைக் கொண்டு வந்து பூட்டினர். அவற்றின் கன்றுகளைத் தொழுவத்தில் அடைத்து வைத்தனர். ஆண்டவரின் பேழையையும் பொன் சுண்டெலிகளும், மூலக்கட்டிகளின் உருவங்களும் வைத்திருந்த பெட்டியையும் அவ்வண்டியில் வைத்தனர். பசுக்கள் பெத்சமேசுக்குச் செல்லும் பெருஞ்சாலையில் இடமோ வலமோ விலகாமல் நேரே கத்திக் கொண்டே சென்றன. பெலிஸ்தியத் தலைவர்கள் அவற்றின் பின் பெத்சமேசு எல்லை வரை சென்றனர். அப்போது பெத்சமேசு வாழ் மக்கள் பள்ளத்தாக்கில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் கண்களை உயர்த்திய போது பேழையைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர். பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலுக்குள் வண்டி வந்து நின்றது. அங்கே ஒரு பாறை இருந்தது. அவர்கள் வண்டியின் மரத்தை பிளந்து பசுக்களை ஆண்டவருக்கு எரி பலி செலுத்தினர். லேவியர் ஆண்டவரின் பேழையையும் அதன் அருகில் இருந்த பொன் உருவங்களைக் கொண்டிருந்த பெட்டியையும் இறக்கி, பாறையின் மீது வைத்தனர். பெத்சமேசின் மக்கள் அன்றையதினம் எரி பலிகளையும் வேறு பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர். பெலிஸ்தியரின் ஐந்து தலைவர்களும் இதைக் கண்டபின் அன்றே எக்ரோனுக்குத் திரும்பினர்.

பெலிஸ்தியர் குற்ற நீக்க பலியாக ஆண்டவருக்குச் செலுத்திய மூலக் கட்டிகளின் பொன் உருவங்கள் இவையே; அஸ்தோதுக்கு ஒன்று, காசாவுக்கு ஒன்று, அஸ்கலோனுக்கு ஒன்று, மாத்திற்கு ஒன்று, எக்ரோனுக்கு ஒன்று. பொன் சுண்டெலிகள், அரண் சூழ் நகர்கள் தொடங்கி, நாட்டுப்புறச் சிற்றூர்கள் வரை ஐந்து தலைவர்களுக்குச் சொந்தமான அனைத்து பெலிஸ்திய நகர்களின் எண்ணிக்கைக்குச் சரியாக இருந்தன. ஆண்டவரின் பேழை வைக்கப்பட்ட அந்தப் பாறை இந்நாள் வரை பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலில் உள்ளது. பெத்சமேசு வாழ் மக்களை ஆண்டவர் சாகடித்தார். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் பேழைக்குள் உற்று நோக்கினர். மக்களுள் எழுபது பேரை அவர்வீழ்த்தினர். மக்களிடையே இப்பெரும் அழிவை ஏற்படுத்தியதற்காக மக்கள் புலம்பினார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2023, 13:51