வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டோருக்கு சீன கத்தோலிக்க நிதியுதவி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
சீனாவின் Hebei மாநிலத்தில் ஜூலை முதல் இடம்பெற்றுவரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பலர் இறந்துள்ளது மற்றும் பல இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு பொருளுதவிகளையும் நிதியுதவிகளையும் வழங்கியுள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்கர்.
பெருமழை மற்றும் நிலச்சரிவால் சீனாவில் குறைந்தபட்சம் 62பேர் இறந்துள்ள நிலையில், அந்நாட்டு கத்தோலிக்கர்கள் பெருமளவில் நிதியுதவிகளை வழங்கியுள்ளனர்.
அதிக அளவில் பாதிப்படைந்துள்ள Hebei மாநிலத்திற்கு Shanghai மறைமாவட்டம் 69,035 அமெரிக்க டாலர் மதிப்புடைய சீனப் பணத்தை அனுப்பியுள்ளது.
Hebei மாநிலத்திலுள்ள கத்தோலிக்க சமூகச்சேவை அமைப்பான Jinde பிறரன்பு குழு வழியாக இது தரப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவி தவிர, Shanghai மறைமாவட்டத்தால் 500 நீர்க்காப்பு தார்ப்பாய்களும், கம்பளிப் போர்வைகளும் அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கிடையே, 1,64,570 அமெரிக்க டாலர் மதிப்புடைய பணத்தை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கியுள்ள Jinde கத்தோலிக்க பிறரன்பு குழு, மேலும் உதவிகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.(UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்