தேடுதல்

நெபுகத்னேசரின் இரண்டாவது கனவு நெபுகத்னேசரின் இரண்டாவது கனவு 

தடம் தந்த தகைமை - நெபுகத்னேசரின் இரண்டாம் கனவு

விண்ணகக் கடவுளே உலகை ஆள்கின்றார் என்பதை நீர் உணர்ந்தவுடன், அரசுரிமை மீண்டும் உனக்குக் கிடைக்கும், என கனவிற்கு விளக்கமளித்தார் தானியேல்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மீண்டும் நெபுகத்னேசர் ஒரு கனவு கண்டார். அதன் பொருளை தனக்கு விளக்கும்படி கூறி பெல்தசாச்சார் என்னும் பெயர்கொண்ட தானியேலிடம் அந்த கனவை விவரித்தார்.  இதைக் கேட்டவுடன் தானியேல் ஒரு கணம் திகைத்து நின்றார். மனித சமுதாயத்தினின்று நீர் விரட்டப்படுவீர்; காட்டு விலங்குகளோடு வாழ்ந்து, மாடுபோல புல்லை மேய்ந்து, வானத்தின் பனியில் நனைந்து கிடப்பீர். இவ்வாறு ஏழு ஆண்டுகள் உம்மைக் கடந்து செல்லும். விண்ணகக் கடவுளே உலகை ஆள்கின்றார் என்பதை நீர் உணர்ந்தவுடன், அரசுரிமை மீண்டும் உனக்குக் கிடைக்கும், என அக்கனவிற்கு விளக்கமளித்தார்.

அவ்வாறே அரசன் நெபுகத்னேசருக்கு அனைத்தும் நேர்ந்தது. ஓராண்டு சென்றபின், ஒருநாள் அரசன் பாபிலோன் அரண்மனையின் மேல் மாடத்தில் உலவிக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன், “என் வலிமையின் ஆற்றலால் அரசன் வாழும் மாளிகையாகவும், எனது மாட்சியும் மகுடமாகவும் நான் கட்டியெழுப்பியதன்றோ இந்த மாபெரும் பாபிலோன்!” என்றான். இந்தச் சொற்களை அரசன் சொல்லி முடிக்கும் முன்பே, வானத்திலிருந்து ஒரு குரலொலி, “நெபுகத்னேசர் அரசனே! உனக்கே இந்தச் சொல்! உன்னுடைய அரசு உன்னிடமிருந்து அகன்று விட்டது. மனித சமுதாயத்தினின்று நீ விரட்டப்படுவாய். காட்டு விலங்குகளோடு வாழ்ந்து, மாடுபோலப் புல்லை மேய்வாய்; மனிதர்களின் அரசை உன்னதரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்றும் நீ உணர்ந்து கொள்வதற்குள் ஏழு ஆண்டுகள் உன்னைக் கடந்து செல்லும்.” என்றது. உடனே இந்த வாக்கு நெபுகத்னேசரிடம் நிறைவேறிற்று.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2023, 12:35