தேடுதல்

புலம்பெயர்ந்த சிரியா மக்கள் புலம்பெயர்ந்த சிரியா மக்கள்  (ANSA)

புலம்பெயர்ந்தோருக்கு உதவும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு

லெபனானில் இருந்து 96 சிரியர்கள் சன் எஜிதியோ அமைப்பின் உதவியுடன் இத்தாலிக்குப் புலம்பெயர உள்ளனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

லெபனானில் இருந்து 2650 பேருக்கு மேல் புலம்பெயர்ந்து இத்தாலிக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டனர் என்றும், இதுவரை  6,500  புலம்பெயர்ந்த மக்கள் மனிதாபிமான உதவிகள் வழியாக ஐரோப்பாவிற்கு வந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது சன் எஜிதியோ பிறரன்பு அமைப்பு

செப்டம்பர் 26 செவ்வாய்க்கிழமை காலை, 18 சிறார் உட்பட, 48 சிரிய மக்கள் பெய்ரூட்டில் இருந்து ஒரு விமானத்தில் உதவியுடன் உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்துள்ளதையடுத்து இவ்வாறு தெரிவித்துள்ளது கத்தோலிக்க பிறரன்பு அமைப்பான சன் எஜிதியோ அமைப்பு.

இத்தாலிக்குள் நுழைந்த அம்மக்கள் நீண்ட காலமாக அக்கர் பகுதி, வடக்கு லெபனான், பெக்கா பள்ளத்தாக்கு போன்ற ஆபத்தான  இடங்களில் வசித்தவர்கள் என்றும் மொத்தம் லெபனானில் இருந்து 96 சிரியர்கள் சன் எஜிதியோ அமைப்பின் உதவியுடன் இத்தாலிக்குப் புலம்பெயர உள்ளனர் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 28 வியாழன் அன்று 21 பேர் சிறார் உட்பட மேலும் 48 பேர் வர இருக்கின்றனர் என்றும், இவர்கள் அனைவரும் இத்தாலியின் 11 பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்த சிரியா குடும்பங்கள் 11 இத்தாலியின் லாசியோ, காம்பானியா, எமிலியா-ரோமஞ்னா, லிகுரியா, மோலிஸ், பீட்மாண்ட், புக்லியா, சர்தீனியா, சிசிலி, டஸ்கனி, வெனெத்தோ ஆகிய பகுதிகளில் வரவேற்கப்பட உள்ளனர்.

இத்தகைய மக்கள் இத்தாலிய மொழியினைக் கற்றவுடன் புலம்பெயர்ந்தோர் நிலைக்கான உரிமையைப் பெற்று அவரவர் தகுதிக்கேற்ப பணியமர்த்தப்படுவார்கள் என்றும், பாதிக்கப்பட்ட மற்றும் மிகவும் பலவீனமான மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2023, 13:34