தேடுதல்

புலம்பெயரும் ஹெய்டி மக்கள் புலம்பெயரும் ஹெய்டி மக்கள்  (ANSA)

ஹைட்டியில் வன்முறை அதிகரித்து வருகிறது - பேராயர் மெசிதோர்

அரசு பெயரளவில் மட்டுமே உள்ளது. கைவிடப்பட்ட மக்கள் மிகவும் துயரமான நிலையில் உள்ளனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஹைட்டி பகுதி மக்கள் தீவிர வன்முறை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட ஒரு துயரமான சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்றும், வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹைட்டி படுகுழியின் விளிம்பில் உள்ள ஒரு நாடு என்றும் கூறியுள்ளார் பேராயர் Max Leroy Mésidor.

நாடு முழுவதும் பரவி வரும் தீவிர வன்முறையால் 2,00,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் கைகளை கட்டிக்கொண்டு இருக்க முடியாது என்று கூறியுள்ளார் Port au Prince, உயர் மறைமாவட்ட பேராயர் Max Leroy Mésidor.

ஹைட்டியின் தலை நகரான “போர்ட்-ஓ-பிரின்ஸில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது என்றும், வன்முறையில் ஈடுபடுபவர்கள் தலைநகரின் முக்கால்வாசிக்கும் அதிகமான பகுதியைக் கட்டுப்படுத்துகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார் பேராயர் மெசிதோர்.

2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது வன்முறை 14 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ள பேராயர் மெசிதோர், இத்தகைய கொடிய சூழ்நிலையை எதிர்கொண்ட அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களை விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு அழைப்பு விடுத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

"அரசு பெயரளவில் மட்டுமே உள்ளது. கைவிடப்பட்ட மக்கள் மிகவும் துயரமான நிலையில் உள்ளனர் என்று சுட்டிக்காட்டிய பேராயர் மெசிதோர் அவர்கள் தீவிர வன்முறையால் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர்  இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடிமக்கள் ஒன்றிணைந்து ஒரு தற்காப்பு இயக்கத்தை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2023, 12:23