தேடுதல்

Scholas Occurrentes அமைப்பின் போர்த்துக்கல் கூட்டம் Scholas Occurrentes அமைப்பின் போர்த்துக்கல் கூட்டம்  (Vatican Media)

சந்திப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பவர்களாகச் செயல்பட

இளையோர் தங்களின் கலாச்சார மற்றும் மத பன்முகத் தன்மைகளின் நடவடிக்கைகள் மற்றும் அனுபவங்களை பகிர்வதுடன், சந்திப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பவர்களாகவும் செயல்பட உள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

Scholas Occurrentes என்னும் உலக கல்விசார் இயக்கத்தினால் பிரேசிலின் São Paulo நகரில் 25 நாடுகளின் 80 நகர்களைச் சேர்ந்த இளையோர் கூடி,  மதங்களிடையே, கலாச்சாரங்களிடையே பேச்சுவார்த்தைகளுக்கு கல்வி ஆற்றிவரும் பணிகள் குறித்து விவாதித்து வருகின்றனர்.

அக்டோபர் 23 திங்கள் முதல் 26 வியாழக்கிழமை வரை இடம்பெறும் ஸ்கொலாஸ் ஒக்காரந்தெஸ் என்பதன் ஆறாவது உலக இளையோர் கூட்டம்,  இளையோர் தங்களிடையே உரையாடல், ஒன்றிணைந்து வாழ்தல், தியானித்தல் போன்றவைகளை ஊக்குவிப்பதாக உள்ளது.

அர்ஜெண்டினா, பல்கேரியா, பிரேசில், கொலம்பியா, ஸ்பெயின், அமெரிக்க ஐக்கிய நாடுகள், எல் சால்வதோர், ஈகுவதோர், ஹெயிட்டி, இஸ்ராயேல், இத்தாலி, மெக்சிக்கோ, மொசாம்பிக், போர்த்துக்கல், பானமா, பெரு, பராகுவாய், வெனிசுவேலா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ள இளையோர் தங்களின் கலாச்சார மற்றும் மத பன்முகத் தன்மைகளின் நடவடிக்கைகள் மற்றும் அனுபவங்களை பகிர்வதுடன், சந்திப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பவர்களாகவும் செயல்பட உள்ளனர்.

ஸ்கோலாஸ் ஒக்காரெந்தஸின் முதல் உலக  கூட்டம் 2016ஆம் ஆண்டு வத்திக்கானிலும், இரண்டாவது கூட்டம்  2017ல் எருசலேமிலும், 2018ஆம் ஆண்டு மூன்றாவது கூட்டம் புவனோஸ் அயரஸ் நகரிலும், நான்காவது கூட்டம் 2019ல் மெக்ஸிகோ சிட்டியிலும், ஐந்தாவது கூட்டம் 2022ல் பானமா நகரிலும் இடம்பெற்றிருக்க, இந்த ஆறாவது கூட்டம் சாவ் பவுலோ நகரில் இம்மாதம் 23 முதல் 26 வரை இடம்பெறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2023, 16:11