தேடுதல்

ஆப்ரிக்க புலம்பெயர்ந்த்தோர் அடைக்கலம் தேடுதல் ஆப்ரிக்க புலம்பெயர்ந்த்தோர் அடைக்கலம் தேடுதல்  (ANSA)

ஆப்ரிக்க இளையோருக்கு சொந்த நாட்டிலேயே வேலைவாய்ப்பு

ஐரோப்பாவிற்குள் அடைக்கலம் தேடும் ஆப்ரிக்க மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இவ்வெண்ணிக்கையைக் குறைக்க, ஆப்ரிக்காவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதே ஒரே வழி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

வருங்காலம் குறித்த நம்பிக்கையின்மையின் காரணமாகவே இளையோர் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி பணக்கார நாடுகளில் அடைக்கலம் தேட முனைவதால், அதை தடுக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு சொந்த நாட்டிலேயே வேலைவாய்ப்புக்களை உருவாக்க ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் கமரூன் ஆயர் ஒருவர்.

ஐரோப்பாவிற்குள் அடைக்கலம் தேடிவரும் ஆப்ரிக்க மக்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு பெருமெண்ணிக்கையில் அதிகரித்துள்ள நிலையில், குடிபெயர்வோரின் எண்ணிக்கையைக் குறைக்க, ஆப்ரிக்காவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதே ஒரே வழி என்ற Maroua-Mokolo மறைமாவட்ட ஆயர் Bruno Ateba அவர்கள், நிலையான ஒரு வருங்காலம் குறித்த நம்பிக்கை குறைபடுவதற்கும், குடிபெயர்தலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது எனக் கூறினார்.

இளையோரின் திறமைகளும் சக்தியும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் தேவைப்படுவதால், அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறுவதை தாங்களும் விரும்பவில்லை எனக்கூறிய ஆயர், இவர்களுக்கு வளமுடன் வாழ்வதற்கான வாய்ப்புக்களும் கருவிகளும் தேவைப்படுகிறன என்பதை மனதில் கொண்டு ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

எழ்மையைத் தவிர, இஸ்லாமிய தீவிரவாத குழுக்களும் இளையோர் வெளி நாடுகளில் அடைக்கலம் தேட ஒரு காரணமாகின்றன என்ற ஆயர் Ateba அவர்கள், இளையோர் தங்கள் சொந்த நாட்டிலேயே இருந்து தங்கள் பங்களிப்பை வழங்க தலத்திருஅவைகள் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் ஆற்றி வருகின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2023, 17:06