தேடுதல்

பள்ளி மாணவர்கள் அமைதியின் தூதுவர்களாக பள்ளி மாணவர்கள் அமைதியின் தூதுவர்களாக  (AFP or licensors)

கத்தோலிக்க பள்ளி மாணவர்கள் அமைதியின் தூதுவர்களாக.....

2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மத சுதந்திரத்தை இந்து சார்பு குழுக்கள் வன்முறையின் மூலம் முடக்கி வருவதாக கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

அக்டோபர் 25 அன்று தமிழ்நாட்டின் ஈரோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் இளைஞர்களை அமைதியை உருவாக்குபவர்களாக மேம்படுத்துதல் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்தவ, முஸ்லீம் மற்றும் இந்து புனித நூல்களின் வாசிப்புடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியின்போது, மதங்களுக்கு இடையேயான அமைதிக்காகப் பாடுபடுவோம் என்று பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பற்றத் தன்மையின் அறிக்கைகளுக்கு மத்தியில், நண்பர்கள், குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் பொருட்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும், அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாக மாணவர்களைப் பயிற்றுவிப்பதை மையமாகக் கொண்ட இம்முயற்சியில் மாவட்டத்தில் உள்ள மேலும் இரண்டு கத்தோலிக்க பள்ளிகள் புனித ஜோசப் பள்ளியுடன் கைகோர்த்துள்ளதாகவும்  பள்ளியின் முதல்வர் அருள்தந்தை மார்க் மான்போர்ட் கூறினார்.

ஏற்கனவே, கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லீம் பின்னணியில் இருந்து 30 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளதாகவும், இதேபோன்ற நிகழ்ச்சிகளை மேலும் ஏற்பாடு செய்ய பள்ளி திட்டமிட்டுள்ளதாகவும் மான்போர்ட் தெரிவித்தார்.

முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற பிரான்சிஸ்கன் மிஷனரிஸ் ஆஃப் மேரியின் ஊட்டி மாகாணத்தைச் சேர்ந்த சகோதரி ஸ்டெல்லா பால்தாசர், இந்திய அரசியலமைப்பையும் அதன் அடிப்படைக் கொள்கைகளான ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றையும் கற்றுக்கொள்ளுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

அமைதியைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள கெவின், இந்தியாவில் மக்கள் ஒரே தேசமாக வளர்வதைப் மதப் பாகுபாடு பாதிப்பதாக கூட்டத்தில் கூறியதுடன், 1947 இல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு உருவாக்கப்பட்ட தற்போதைய இந்திய அரசியலமைப்பு மதச்சார்பற்ற தேசத்தைக் குறித்தாலும், 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பிஜேபியை ஆதரிக்கும் இந்து குழுக்கள் இந்தியாவை ஒரு முழு இந்து நாடாக மாற்ற வேலை செய்கின்றபோதிலும்,  இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுதான், எந்த மதமும் நம்மை பிரிக்கக்கூடாது, என்று UCA செய்திகளிடம் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2023, 14:52