தடம் தந்த தகைமை – போரிடத் தயாரான பெனதாது
மெரினா ராஜ் - வத்திக்கான்
இஸ்ரயேலின் அரசன் பெனதாதின் தூதரை நோக்கி, “நீங்கள் அரசராகிய என் தலைவரிடம் சென்று, ‘நீர் உம் அடியவனாகிய என்னிடம் முதல் முறை சொல்லியனுப்பியவாறு நான் யாவற்றையும் செய்து தருவேன். ஆனால், இம்முறை நீர் கேட்பவற்றை என்னால் தர முடியாது’ என்று தெரிவியுங்கள்” என்றான். அத்தூதரும் திரும்பிச் சென்று இப்பதிலை அவனுக்குத் தெரிவித்தனர். பெனதாது மீண்டும், “எனக்கடியில் உள்ள மக்கள் ஒவ்வொருவரும் கைக்கு ஒரு பிடி சமாரியாவின் புழுதியை அள்ளாமல் போனால், என் தெய்வங்கள் எனக்குத் தகுந்த தண்டனை கொடுக்கட்டும்!” என்று சொல்லி அனுப்பினான்.
அதற்கு இஸ்ரயேலின் அரசன் மறுமொழியாக, “போர்க் கவசம் அணிந்தவுடன் போரில் வென்றவன் போல் பிதற்றக்கூடாது என்று அவனிடம் சொல்” என்று பதிலளித்தான். மறுமொழி வந்து சேர்ந்த நேரத்தில் பெனதாது மற்ற மன்னர்களோடு மது அருந்திக்கொண்டிருந்தான். அதைக் கேட்டு அவன் தம் அலுவலரை நோக்கி, “போரிடத் தயாராகுங்கள்” என்றான். அவர்களும் நகருக்கு எதிராகப் போரிடத் தயாராயினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்