தேடுதல்

இறைவாக்கினருடன் மன்னர்  இறைவாக்கினருடன் மன்னர்  

தடம் தந்த தகைமை - சிரியாவின் இரண்டாம் படையெடுப்பு

“நீ போய் உன் படைவலிமையை மிகுதியாக்கிக் கொள். அடுத்த இளவேனிற் காலத்தில் சிரியாவின் மன்னன் மீண்டும் உன்னோடு போரிட வருவான். அதற்குள் நீ செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தித்துப்பார்

மெரினா ராஜ் - வத்திக்கான்

மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்களும் அவர்கள் பின்வந்த படையினரும் நகரை விட்டு வெளியே வந்ததும், ஒவ்வொருவரும் தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை வெட்டி வீழ்த்தினர். சிரியர் புறமுதுகு காட்டி ஓட, இஸ்ரயேலர் அவர்களைத் துரத்திச் சென்றனர். சிரியாவின் மன்னன் பெனதாது குதிரைமீது ஏறிக் குதிரை வீரரோடு தப்பியோடினான். இஸ்ரயேலரின் அரசன் துரத்திச் சென்று குதிரைகளையும் தேர்களையும் கைப்பற்றி, பலரைக் கொன்று குவித்தான். பின்பு, இறைவாக்கினர் இஸ்ரயேலின் அரசனிடம் வந்து, அவனை நோக்கி, “நீ போய் உன் படைவலிமையை மிகுதியாக்கிக் கொள். அடுத்த இளவேனிற் காலத்தில் சிரியாவின் மன்னன் மீண்டும் உன்னோடு போரிட வருவான். அதற்குள் நீ செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தித்துப்பார்!” என்றார்.

மேலும், சிரியாவின் மன்னனுடைய அலுவலர் அவனிடம் கூறியது: “இஸ்ரயேலரின் கடவுள் மலைகளின் கடவுள். எனவே, அவர்கள் நம்மை விட வலிமை மிகுந்தவராயிருந்தனர். ஒருவேளை நாம் அவர்களோடு சமவெளியில் போரிட்டோமானால், அவர்களை விட நாமே வலிமை மிகுந்தவராயிருப்போம். இதற்கு ஏற்ற வழியாதெனில் மன்னர்களைப் படைத் தலைமையினின்று நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாகப் படைத்தலைவர்களை நீர் நியமிக்க வேண்டும். நீர் இழந்து விட்ட படைக்குச் சமமான படையை மறுபடியும் திரட்டிக் கொள்ளும். குதிரைக்கு குதிரை, தேருக்குத் தேர், அதே அளவில் திரட்டிக் கொள்ளும். சமவெளியில் அவர்களோடு போரிட்டால், நாமே அவர்களை விட வலிமை மிக்கவராயிருப்போம் என்பது உறுதி” என்றனர். அவனும் அவர்களது பேச்சை நம்பி அவ்வாறே செய்தான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2023, 11:19