திருப்பீடத்திற்கான இரஷ்ய தூதுவரின் நேர்முகம்
திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்
திருப்பீடத்திற்கான இரஷ்யாவின் தூதுவராக பொறுப்பேற்றபின் தனது முதல் நேர்காணலில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த தூதுவர் இவான் சோல்டனோவ்ஸ்கி, தற்போதைய வரலாற்றுக் கட்டத்தில் இரஷ்யா மற்றும் திருப்பீடத்திற்கான உறவுகள் பற்றிய முன்னோக்கை விளக்கினார்.
மற்றவர்களுடன் நெருக்கமாகி அவர்களின் நல்வாழ்வைத் தேடும் ஆன்மீகத்தில் நாம் வாழும்போது, இறைவனின் மிகப்பெரிய மற்றும் மிக அழகான பரிசுகளுக்கு நம் இதயம் விரிவடைகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவதாகவும, இதன் விளைவாக, எந்தவொரு பிரச்சினையிலும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் தனிப்பட்ட தொடர்புகளை அவர் ஊக்குவிக்கிறார் எனவும், இந்த ஆன்மீகம் கடவுள் நம்பிக்கையின் புரிதலிலும் வெளிச்சத்திலும் நமது வளர்ச்சிக்கு உதவுகிறது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 18, 2023 அன்று, திருப்பீடத்திற்க்கான ரஷ்ய நாட்டின் மூன்றாவது தூதரான இவான் சோல்டனோவ்ஸ்கி தனது நற்சான்றிதழ்களை திருத்தந்தை பிரான்சிஸிடம் வழங்கி பதவி நியமனம் பெற்றார்.
சோல்டனோவ்ஸ்கி பலதரப்பு உறவுகளில் வல்லுநர், OSCE, NATO மற்றும் ஐரோப்பிய கவுன்சிலில் இரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்.
2015 முதல் 2022 வரை, அவர் ஐரோப்பா கவுன்சிலுக்கு இரஷ்யாவின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றினார் என்பதும் குறிப்படத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்