சட்டத்தின் ஆட்சியிலிருந்து விலகிச் செல்கிறது நிக்கராகுவா: ஐ.நா
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நிக்கராகுவா, சட்டத்தின் ஆட்சியிலிருந்து மேலும் விலகிச் செல்கிறது மற்றும், குறிப்பாக, அடிப்படைச் சுதந்திரங்கள் மக்களின் துன்பங்களை அதிகப்படுத்துகின்றன, இளைஞர்களின் வெளியேற்றத்தை தூண்டுகின்றன, மேலும் மக்களாட்சி நிறுவனங்களின் எதிர்காலத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான துணைஆணையர் Nada Al-Nashif அவர்கள் கவலை தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது L’Osservatore Romano என்ற நாளிதழ்.
மத்திய அமெரிக்க நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜெனீவாவில் அவர் அறிக்கையொன்றை சமர்ப்பித்தபோது அதில் இவ்வாறு கூறியுள்ளார் Nada Al-Nashif.
அரசியல் மற்றும் பூர்வக்குடி தலைவர்கள், கத்தோலிக்கத் திருஅவை உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பொதுத் துறையில் மாற்றுக் கண்ணோட்டத்துடன் பங்களிக்கக் கூடியவர்களை மானாகுவாவிலுள்ள அதிகாரிகள் தொடர்ந்து துன்புறுத்துவதை தான் கண்டிப்பதாகவும் உரைத்துள்ளார் Nashif..
இந்தச் சூழலில், அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் தன்னிச்சையான தடுப்புக்காவல் வழக்குகளுடன், வாழும் இடத்தின் மீதான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் Nashif.
டிசம்பர் 19, இச்செவ்வாயன்று, அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) மானாகுவா அரசின் கோரிக்கையின் பேரில் நிக்கராகுவாவில் அதன் மனிதாபிமான பணியை இடைநிறுத்துவதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம், நிக்கராகுவாவின் பாராளுமன்றம், அந்நாட்டு அரசுத் தலைவர் Daniel Ortega-வின் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது இச்செஞ்சிலுவை சங்கம் நடுநிலைமையை மீறியதாகக் குற்றம் சுமத்தி, 1931-ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் செயல்பட்டு வந்த இச்சங்கத்தை அங்கிருந்து அகற்ற ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்