தேடுதல்

செபிக்கும் மறைப்பணியாளர் செபிக்கும் மறைப்பணியாளர்  (AFP or licensors)

2023 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட மறைப்பணியாளர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆப்ரிக்காவில் அதிக மறைப்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

2023 ஆம் ஆண்டில் உலகளவில் படுகொலை செய்யப்பட்ட மறைப்பணியாளர்கள் மொத்தம் 20 பேர் என்றும், ஆயர், அருள்பணியாளர், அருள்பணித்துவ மாணவர், திருத்தொண்டர், பொதுநிலையினர் அனைவரும் உள்ளடக்கிய இந்த எண்ணிக்கைக் கடந்த ஆண்டை விட அதிகம் என்றும் பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

டிசம்பர் 30 சனிக்கிழமை 2023 ஆம் ஆண்டின் இறுதி நாளுக்கு மிக அருகில் இருக்கும் இந்நாளில் உலமெங்கிலும் கிறிஸ்தவ விழுமியங்களுக்காக படுகொலை செய்யப்பட்ட மறைப்பணியாளர்கள் குறித்த தகவல்களை Dossier எனப்படும் வருடாந்திர பத்திரிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அதன் ஆசிரியர்  Stefano Lodigiani.

Agenzia Fides என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்தின் செய்திகளின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் ஆப்ரிக்காவில் அதிக மறைப்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், படுகொலை செய்யப்பட்ட 20 பேரில், ஓர் ஆயர், 8 அருள்பணியாளர்கள், 1 அருள்பணித்துவமாணவர், 1 அருள்பணித்துவ பயிற்சி மாணவர், 2 துறவறத்தார், மற்றும் 7 பொதுநிலையினர் அடங்குவர்.

ஆப்ரிக்காவில் படுகொலை செய்யப்பட்ட 9 மறைப்பணியாளர்களில் 5 பேர் அருள்பணியாளர்கள், 2 துறவறத்தார், ஒரு அருள்பணித்துவ மாணவர் மற்றும் ஒரு அருள்பணித்துவ பயிற்சி மாணவர்.

அமெரிக்காவில்  கொலைசெய்யப்பட்ட 6 மறைப்பணியாளர்களில்  ஒரு ஆயர் 3 அருள்பணியாளர்கள் 2 பொதுநிலையினர் பெண்கள்.

ஆசியாவில்  பொதுநிலையினர் நால்வரும், ஐரோப்பாவில் ஒரு பொதுநிலையினரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  (FIDES)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2023, 11:39