தேடுதல்

இயேசு திருமுழுக்குப் பெற்ற யோர்தான் நதிப் பகுதி இயேசு திருமுழுக்குப் பெற்ற யோர்தான் நதிப் பகுதி  (ANSA)

தடம் தந்த தகைமை - நீரா என்னிடம் வருகிறீர்?

சிற்றாறு ஆழமாக இருக்கும்போது நீர் நிதானமாக ஓடுகிறது. பணிவில்லாத நம்பிக்கை அகங்காரமாகும்.; பணிவே எல்லா நெறிகளுக்கும் அடித்தளம். உண்மையான பணிவு பிறரை ஈர்க்கும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்: நீரா என்னிடம் வருகிறீர்? – இது திருமுழுக்கு யோவானின் கேள்வி.

இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை. – இது இயேசுவின் பதில்.

பாவிகள், மனம் திரும்ப விழைவோர், பிற இனத்தார் நிலையிலிருந்து யூதம் தழுவ விரும்புவோர் போன்றோர் யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்று வந்தனர். அந்த வரிசையில் இயேசு வந்து நின்றதை யோவானால் ஏற்க இயலவில்லை. ஏனெனில் யோவான் இயேசுவை மெசியா என உளப்பூர்வமாக உணர்ந்திருந்தார்.

சிற்றாறு ஆழமாக இருக்கும்போது நீர் நிதானமாக ஓடுகிறது. இயேசு திருமுழுக்கு வேண்டும் நிலையும் இதுபோலவே. திருமுழுக்குப் பெற வரிசையாக நின்ற பாவிகளோடு, தான் உத்தமன் என்று தம்மை உயர்த்திக் காட்ட விரும்பாத இயேசு அவர்களோடு அணியானார். அந்தத் தாழ்ச்சி மனநிலையே வானகத் தந்தையின் பூரிப்பான சொல்லுக்கு வாசலானது. பணிவில்லாத நம்பிக்கை அகங்காரமாகும்.; பணிவே எல்லா நெறிகளுக்கும் அடித்தளம். உண்மையான பணிவு பிறரை ஈர்க்கும்.

இறைவா! பணிவையும் பாராட்டும் பண்பையும் அணிகலனாகக் கொள்ளும் அருள் தாரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2024, 10:21