தேடுதல்

இயேசுவை அடையாளம் காட்டும் திருமுழுக்கு யோவான் இயேசுவை அடையாளம் காட்டும் திருமுழுக்கு யோவான் 

தடம் தந்த தகைமை - என்ன தேடுகிறீர்கள்?

இயேசு தமக்கெனக் கூட்டம் சேர்க்கும் தலைவராகத் திகழவில்லை. அதேவேளையில் தம்மைப் பின்தொடர்வோரைத் தள்ளிவிடவுமில்லை.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி என சான்று பகர்கிறார் திருமுழுக்கு யோவான்.

“என்ன தேடுகிறீர்கள்?” என தன் முதல் இரு சீடர்களிடம் கேட்கிறார் இயேசு.

பழைய ஏற்பாட்டில், ஆட்டுக்குட்டி யாதும் அறியாத, குற்றமற்ற தன்மையின் அடையாளமாக உருவகிக்கப்பட்டது. எனவே அது பலியிடும் உயிரானது. குற்றமற்ற ஆட்டுக்குட்டி மீது குற்றங்களை எல்லாம் சுமத்தி ஊருக்குப் புறம்பே விரட்டிக் கொல்லும் பழக்கம் யூத சமூகத்துள் பரவலாயிருந்தது. பலியாக்கப்பட அருள்பொழிவு செய்யப்பட்ட இயேசுவின் மெசியாத் தன்மையை யோவான் மனமுணர்ந்து சொன்ன உருவகச் சொல்லே “கடவுளின் ஆட்டுக்குட்டி.” அந்த முன்மொழியே இயேசுவின் வாழ்வில் கல்வாரியில் அரங்கேற்றமானது.

இயேசு தமக்கெனக் கூட்டம் சேர்க்கும் தலைவராகத் திகழவில்லை. அதேவேளையில் தம்மைப் பின்தொடர்வோரைத் தள்ளிவிடவுமில்லை. யோவானின் சீடர்கள் ஒருவிதத் தேடலில் ஈடுபட்டிருந்தனர் என்பது உண்மை. அத்தேடலுக்கு இயேசு எனும் ஆட்டுக்குட்டி விடையானார். ஆயரும் (யோவா 10:11) ஆட்டுக்குட்டியுமாக (யோவா1:36) அர்ப்பணித்த

இயேசு, தம்மைப் பலிப் பொருளாகவும், பலியிடுபவராகவும் ஆக்கினார்.

இறைவா! தேடல் தெய்வீகமானது எனப் புரியும் வரம் தாரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2024, 12:39