தடம் தந்த தகைமை – அரசன் பெனதாதுவை மன்னித்த அரசர் ஆகாபு
மெரினா ராஜ் - வத்திக்கான்
பெனதாதுவின் பணியாளர் வந்து அவனை நோக்கி, “இஸ்ரயேல் குல அரசர்கள் இரக்கத்தின் மன்னர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, நாம் சாக்குத் துணியை இடுப்பிலும், கயிற்றைத் தலையிலும் கட்டிக்கொண்டு இஸ்ரயேலின் அரசனிடம் போவோம். ஒருவேளை அவர் உமக்காகிலும் உயிர்ப் பிச்சை அளிக்கலாம்” என்று சொன்னார்கள். அவ்விதமே அவர்கள் சாக்குத் துணியை இடுப்பிலும் கயிற்றைத் தலையிலும் கட்டிக்கொண்டு இஸ்ரயேல் அரசனிடம் வந்தனர். அவர்கள் அரசனிடம், “உம் பணியாளர் பெனதாது, ‘எனக்கு உயிர்ப்பிச்சை தாரும்’ என்று உம்மிடம் மன்றாடுகிறார்” என்று கூறினர். அதற்கு அரசன், “அவர் என் சகோதரர்; அவர் இன்னும் உயிரோடு இருக்கின்றாரா?” என்றார்.
அந்த ஆள்கள் இச்சொற்களை நல்லதோர் அடையாளமாக எடுத்துக்கொண்டு, அவன் சொற்களிலேயே உடனடியாக “ஆம், உம் சகோதரர் பெனதாது உயிரோடிருக்கின்றார்” என்று பதிலளித்தனர். அப்போது அவன், “நீங்கள் போய் அவரை அழைத்து வாருங்கள்” என்றான். பெனதாது அவனிடம் வந்ததும் ஆகாபு அவனைத் தேரில் ஏற்றிக்கொண்டான். அப்போது பெனதாது அவனைப் பார்த்து, “என் தந்தை உம் தந்தையிடமிருந்து கைப்பற்றிய நகர்களை நான் திருப்பிக்கொடுத்து விடுகிறேன். என் தந்தை சமாரியாவில் செய்தது போல், நீரும் தமஸ்குவில் கடைவீதிகளை அமைத்துக்கொள்ளும். இதற்கான உடன்படிக்கை செய்து கொண்டபின், உம்மை நான் அனுப்பி வைப்பேன்” என்றான். அப்படியே ஆகாபு அவனோடு உடன்படிக்கை செய்து கொண்ட பின், அவனை அனுப்பிவைத்தான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்