தடம் தந்த தகைமை – அரசர்களான ஆகாபு மற்றும் யோசபாத்து சந்திப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
மூன்று ஆண்டுகளாகச் சிரியாவுக்கும் இஸ்ரயேலுக்குமிடையே போர் எதுவும் நடக்கவில்லை. ஆனால், மூன்றாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோசபாத்து இஸ்ரயேலின் அரசனான ஆகாபைக் காண வந்தான். இஸ்ரயேலின் அரசன் தன் அலுவலரை நோக்கி, “இராமோத்து-கிலயாது நமக்குரியது என்று அறியீர்களோ? ஆயினும், அதைச் சிரியாவின் மன்னனிடமிருந்து கைப்பற்றுவதற்கு ஏதும் நாம் செய்யாதிருக்கிறோமா?” என்று கூறியிருந்தான். எனவே. அவன் யோசபாத்திடம், “இராமோத்து-கிலாயாதோடு போரிட என்னுடன் வருகின்றீரா?” என்று கேட்டான். அதற்கு யோசபாத்து இஸ்ரயேலின் அரசனை நோக்கி, “உம்மைப் போலவே நானும் தயார்; உம் மக்களைப் போலவே என் மக்களும்; உம் குதிரைகளைப் போலவே என் குதிரைகளும்” என்றான்.
யோசபாத்து மீண்டும் இஸ்ரயேலின் அரசனை நோக்கி, “ஆண்டவரின் வாக்கு யாது என்று இன்று நீர் கேட்டறிய வேண்டும்” என்றான். அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஏறக்குறைய நானூறு பொய்வாக்கினரைக் கூட்டி வரச்செய்து அவர்களை நோக்கி, “நான் இராமோத்து-கிலயாதின் மீது போரிடப் போகலாமா? கூடாதா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “போகலாம். அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்” என்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்