தேடுதல்

வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் உள்ள புனித பேதுரு திருவுருவச் சிலை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் உள்ள புனித பேதுரு திருவுருவச் சிலை  (Vatican Media)

தடம் தந்த தகைமை – பாறை என்பது இனி உன் பெயர்

பாறை படிப்பறிவற்றது. ஆனால் ஏராளமான படிப்பினைகளைக் கொடுக்க வல்லது. அது உறுதியானது. ஆகவேதான் தன்னை அடித்தளமாக்க அர்ப்பணிக்கிறது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

“மெசியாவைக் கண்டோம்”என அறிக்கையிட்ட  அந்திரேயா தம் சகோதரரான சீமோன் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி ‘கேபா’ எனப்படுவாய்” என்றார், என யோவான் நற்செய்தி முதல் பிரிவில் வாசிக்கின்றோம்.

சாமானியர்களைக் கொண்டே சரித்திரம் படைப்பவர் நம் கடவுள். அதிகம் கற்றிராத, சமூகத்தில் பிரபலம் ஆகாத, சாதாரண மீன்பிடித் தொழில் செய்துவந்த, பெத்சாயிதா ஊரைச் சார்ந்த சீமோன் இயேசுவின் அழைப்பு வலைக்குள் அகப்படுகிறார். அந்த அழைப்பின் வழியாகக் “கேபா” எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறார். பாறை எனப் பெயர்ப் பொருள் கொண்ட அவரை வைத்துப் பிரமாண்டமானவற்றை நிகழ்த்தப்போவதன் முன் அடையாளமே இப்பெயர் சூடல்.

பாறை - சிறு கற்துகள்களின் இறுக்கமான கட்டமைப்பு. திருஅவையின் குழுமத் தன்மையின் அடையாளமே இந்தப் பாறை எனும் சொல். பாறை படிப்பறிவற்றது. ஆனால் ஏராளமான படிப்பினைகளைக் கொடுக்க வல்லது. அது உறுதியானது. ஆகவேதான் தன்னை அடித்தளமாக்க அர்ப்பணிக்கிறது. அது பூமியினின்று விண்ணைத் தொடுவது போன்றும் மண்ணுக்குள் வேர்களின்றி ஆழ்ந்தும் உள்ளது. அவ்வாறே நம் ஆழமான நம்பிக்கை இறைநோக்கி இருக்கப் பணிக்கின்றது. பாறையின் போதனைகளைப் புரிந்ததால்தான் இயேசு சீமோன் என்ற சிறுமனிதருக்குப் பாறை என சிறப்புப் பெயர் புனைந்தார். நம்மைவிடப் பிறர் தாழ்ந்தவர் எனக் கருதுவது தவறு மட்டுமன்று; பாவமும் ஆகும்.

இறைவா! எளியவரை இகழாமல் அவர்களோடு இணைந்து பயணிக்கும் மனம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2024, 12:18