தேடுதல்

Centesimus Annus நிறுவனத்தின் அங்கத்தினர் குடும்பத்தை சந்தித்த திருத்தந்தை (2023.06.05) Centesimus Annus நிறுவனத்தின் அங்கத்தினர் குடும்பத்தை சந்தித்த திருத்தந்தை (2023.06.05)   (VATICAN MEDIA Divisione Foto)

கத்தோலிக்க சமூகக் கோட்பாடுகள் குறித்த இணையவழிக் கல்வி

‘நெருக்கடிக்கும் மாற்றத்திற்கும் இடையில் இருக்கும் உலகில் திருஅவையின் சமூகக் கோட்பாடுகளின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் இடம்பெற உள்ள கல்வித் திட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கத்தோலிக்க சமூகக் கோட்பாடுகள் குறித்த புதியப் பாடத் திட்டம் ஒன்றை நேரடியாக வகுப்பறைகள் வழியாகவும் இணையவழியாகவும் வழங்கத் திட்டமிட்டுள்ளது Centesimus Annus என்ற பாப்பிறை ஆதரவு நிறுவனம்.

நேரடியாகவும், இணைய வழியாகவும் திருஅவையின் சமூகக் கோட்பாடுகள் குறித்து கற்க விரும்புவோர் இந்நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நெருக்கடிக்கும் மாற்றத்திற்கும் இடையில் இருக்கும் உலகில் திருஅவையின் சமூகக் கோட்பாடுகளின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் இடம்பெற உள்ள இந்த கல்வித் திட்டம், நேரடியாகவும், இணையவழியாகவும் ஜனவரி 20 முதல் இவ்வாண்டு மார்ச் 23ஆம் தேதிவரை, ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு நடத்தப்படும்.

Centesimus Annus நிறுவனத்தின் தலைவர் Anna Tarantola அவர்களால், உரோம் நகரின் Casa Bonus Pastor இல்லத்தில் திறக்கப்படும் இந்த கல்வித்திட்டம், அனைத்துலக மனித உரிமைகள் மேம்பாடு, அமைதிக்கான வழிகளை மேம்படுத்துதல் போன்றவைகளை நோக்கமாகக் கொண்டது.

திருஅவையின் சமூகக் கோட்பாடுகளின் முக்கியக் கூறுகளை கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த கல்வித் திட்டம், கடந்த காலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், பணியாளர்கள், கல்வியாளர்கள், தொழில் முதலாளிகள், மத அதிகாரிகள், வேலைக்குத் தயாரிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு உதவியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2024, 14:38